Friday, December 9, 2011

வருங்காலத் தொழில்நுட்பம் பாகம் 13

வருங்காலத் தொழில்நுட்பம் 84 - கூகுள் ப்ளஸ் கூடுதல் தகவல்கள்

''என்கிட்ட புது கோலிக்குண்டு இருக்கே!'' என்றால், அடுத்த பெஞ்ச் அருணாசலம், ''எனக்கு அடுத்த வாரம் பளபளனு புது பம்பரம் எங்க மாமா கொண்டுவர்றாரே...'' என்கிற ரீதியில் சென்ற வாரம் இரண்டு நிறுவனங்கள் பேசிக்கொண்டன. கூகுளின் புது கோலிக்குண்டு 'கூகுள் ப்ளஸ்’ என்றால், ஃபேஸ்புக்கின் பளபள பம்பரம், அதன் புதிய வீடியோ பேசும் வசதி. கூகுள் ப்ளஸ் பற்றியே அனைவரும் பேசிக்கொண்டு இருப்பதாக, ஃபேஸ்புக்கின் பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆசாமிகள் சொன்னார்களோ என்னவோ, மார்க் ஸக்கர்பெர்க்கேமீடியா விடம், 'இன்னும் சில நாட்களில் அட்ட காசமாக ஒன்றை வெளியிடப்போகிறோம்!’ என்று சொல்லி எதிர்பார்ப்பைத் தூண்டி, வீடியோ பேசும் வசதியை வெளியிட்டார். கூகுள் ப்ளஸ்ஸுடன் ஒப்பிடும்போது, ஃபேஸ்புக்கின் வீடியோ வசதி அத்தனை அட்டகாசமானது அல்ல. கூகுள் ப்ளஸ் ஸின் Hangout பகுதியில் ஒன்றுக்கும் மேற் பட்ட பலருடன் ஒரே நேரத்தில் வீடியோ அரட்டை அடிக்கலாம். ஃபேஸ்புக்கில் ஒருவருடன் மற்றவர் என இருவர் மட்டுமே வீடியோவில் பேசிக்கொள்ள முடியும். இதற்கு முக்கியக் காரணம், ஃபேஸ்புக்கின் வீடியோ தொழில்நுட்ப பார்ட்னர் ஸ்கைப் (www.skype.com). மைக்ரோசாஃப்ட்டால் சமீபத்தில் வாங்கப்பட்ட ஸ்கைப் தொழில்நுட்பத் துடன் ஃபேஸ்புக் கைகோத்துக் கொண்டதில் ஆச்சர்யம் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன், அதிக முதலீடு தேவைப்பட்டபோது கூகுள் வலிய வந்து முதலீட் டைக் கொடுத்தாலும், அதை வாங்காமல், மைக்ரோ சாஃப்ட்டிடம் இருந்து கால் பில்லியன் டாலர்களை வாங்கிக் கொண்டது ஃபேஸ்புக். பிங் தேடல் தளத்துக்குப் பயனீட்டாளர்களின் தகவல்களைக் கண நேரத்தில் (real time) பகிர்ந்துகொள்வதில் ஆரம்பித்த பாசம், தனது பயனீட்டாளர்களை ஸ்கைப்புடன் பகிர்ந்துகொள்வது வரை நீடிக்கிறது.

இதுவரை கூகுள் ப்ளஸ்ஸைப்பற்றி நல்லதாகவே பின்னூட்டங்கள் வந்தபடி இருக்கின்றன. பொதுவாக, டெக் உலகில் புதிதாக எதையும் பயன்படுத்துபவர்களை 'Early Adopters’ என்பார்கள். டெக் ஞானம் அதிகம்கொண்டவர்களாக இருக்கும்இவர் கள் சொல்வதை வைத்து, ஒரு தளத்தின் அல்லது சேவையின் வெற்றியை நிர்ண யிக்க முடியாது என்றாலும், இவர்கள் சொல்வதை வைத்து, குறிப்பிட்ட சேவை தோல்வியைத் தழுவுமா என்பதை ஓரளவுக்குச் சொல்லிவிட முடியும். கூகுள் ப்ளஸ் தனி மனிதப் பயனீட்டாளர்களிடம் மட்டும் அல்ல; வியாபார நிறுவனங்களாலும் பெரிதாக விரும்பப்படும் என்றே தெரிகிறது. ('இந்தக் கட்டுரையாளருக்கு ஆப்பிள் நிறுவனம்தான் பிடிக்கும்... கூகுள் பிடிக்காதது ஏன்?’ என்று ஆக்ரோஷமாக விகடன் டாட் காமில் கேள்வி கேட்ட பொன் லோகேஷ்வரன் இதில் திருப்தி அடைவார் என நம்புகிறேன்!)


அது இருக்கட்டும்!

உங்களில் எத்தனை பேரிடம் கூகுள் ப்ளஸ்ஸுக்கான 'அழைப்பு’ இருக்கின்றன? இருந்தால், ஒன்றை என் பக்கம் அனுப்புங்க, பாஸ்!

எமிரேட்ஸ், விர்ஜின் போன்ற பல விமான சேவை நிறுவனங்கள் டெக் வசதி களை முன்னேற்றி இருக்கின்றன. சமீபத்தில் விர்ஜின் அமெரிக்க விமானத்தில் சான்ஃபிரான்சிஸ்கோவில் இருந்து நியூயார்க் பயணித்த பெண் ஒருவர் டிவிட்டரில், 'இன்றுதான் டாக்டர் படிப்பை முடித்தேன். விடுமுறைக்காக நியூயார்க் செல்கிறேன். விர்ஜினில் பறப்பது ஆனந்தம்!’ எனப் பயணித்தபடியே ட்விட்ட, அதைப் பார்த்த விர்ஜின் நிறுவன ஊழியர், 'இந்த இளம் டாக்டரை உற்சாகப் படுத்த, அவர் பயணிக்கும் அதே விமானத் தில் இருக்கும் யாராவது ஷாம்பெய்ன் வாங்கிக் கொடுப்பீர்களா?’ என்று ட்விட்ட, அதைச் சில நிமிடங்களில் பார்த்த மற்ற ஒரு பயணி, டாக்டருக்கு ஷாம்பெய்ன் வாங்கிக் கொடுக்க, விர்ஜினுக்கு நல்ல விளம்பரம். பை தி வே, இப்படி முன்னேற்றப் பட்ட டெக் வசதிகளில் முக்கியமானது இருக்கையில் அமர்ந்தபடியே மற்ற இருக்கைகளில் இருப்பவர்களுடன் நீலீணீt செய்யும் வசதி. 10 மணி நேரப் பயணங்களின்போது, எத்தனை படங்களைத்தான் பார்ப்பது? கண் வலிக்கப் பார்த்து முடித்த பின்னர், இதுபோன்ற சமூக ஊடகத் தொழில்நுட்பங்கள் நீண்ட பயணங்களைச் சகித்துக்கொள்ள உதவுவது உண்மை.

சமீபத்தில் நீஈஈஈண்ட பயணம் ஒன்றில் சிலருடன் chat செய்ய முயன்றேன். தீவிரமான ஆன்லைன் பயனீட்டாளர்களுக்குப் பரிச்சயமான வார்த்தைச் சுருக்கங்களின் அர்த்தங்கள் மற்றவர்களுக்குத் தெரிவது இல்லை. அவர்களுக்காகச் சில முக்கிய வார்த்தைச் சுருக்கங்கள் அவற்றின் அர்த்தங்களை ut-ல் தொடங்கி ttly-யில் முடிக்கலாம்.

UT - Are you there?: நீங்கள் இருக்கிறீர்களா? பேச முடியுமா?

ASAP - As soon as possible: உடனடியாக; அவசரமாக

ROFL - Rolling On the Floor Laughing: தரையில் விழுந்து உருண்டு, புரண்டு சிரிக்கிறேன்.

OTP - On The Phone: தொலைபேசியபடி இருக்கிறேன்

CUZ - Because: ஏனென்றால்,

GTG - Got to go: இப்போ கிளம்பி ஆகணும்

CYL - See you Later: அப்புறம் பார்க்கலாம்

B4N - Bye for now: இப்போதைக்கு குட் பை

TTYL - Talk to you Later: அப்புறம் பேசலாம்.

இவற்றின் முக்கிய நோக்கம் கீ-போர்டில் குறைவான பொத்தான்களை அழுத்தி அதிகமாக வார்த்தைகளை எழுதிவிடுவது. அதுவும் அலைபேசிகளில் இருந்தும் chat செய்யலாம் என்ற நிலை வந்ததும், இந்த சுருக் அகராதி விரிவடைந்தபடியே செல்கிறது. யாருக்குத் தெரியும் 2020 சமச்சீர்க் கல்விப் புத்தகங்களில் இந்த அகராதியும் இணைக்கப்படலாம்.

இவற்றை அங்கும் இங்குமாக இணைத்தால், ஒரு non-linear சிறுகதையோ அல்லது கவிதையோ தோன்றி உங்களைச் சித்ரவதை செய்தால் அதற்கு நானோ, நான் தீவிரமாக இயங்கும் டெக் உலகமோ பொறுப்பு ஏற்க முடியாது!

No comments:

Post a Comment