Friday, December 9, 2011

இவன எல்லாம் வெட்டணும்டா! மாணவர்களுடன் இருக்கும் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன்


மாணவர்களுடன் இருக்கும் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என்று பள்ளி பெண் முதல்வரை மிரட்டிய அதிகாரி ?

பள்ளி மாணவ, மாணவியருடன் முதல்வரை படம் எடுத்து மிரட்டிய, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், மின்வாரிய அதிகாரியுமான முத்துராஜ் என்பவர், கைது செய்யப்பட்டார்.

திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த ஆண்டு, மாணவ, மாணவியருடன் பள்ளி முதல்வர் சுர்ஜிதா மற்றும் ஆசிரியர்கள், கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.

சுற்றுலாவில், ஆசிரியர்கள் மற்றும் முதல்வருடன் மாணவ, மாணவியர் பஸ்சிலும், அருவியில் இருந்த போதும், மொபைல் மற்றும் கேமராவில் படம் எடுத்தனர். மாணவர்கள் எடுத்த படத்தை, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், அம்பத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளருமான முத்துராஜ், 37, வாங்கி வைத்துக் கொண்டார். அந்த படங்களை வைத்து, பள்ளி முதல்வர் சுர்ஜிதாவை ஐந்து லட்ச ரூபாய் கேட்டு மிரட்ட ஆரம்பித்தார். பணம் தராவிட்டால், படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டினார்.

இதுகுறித்து, சுர்ஜிதா கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார், முத்துராஜை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

படத்தில் இருப்பது என்ன? : வழக்கமாக சுற்றுலா என்றால், அனைவரும் பதவி மற்றும் வயது வித்தியாசமின்றி ஜாலியாக அரட்டை அடிப்பது, ஆட்டம் பாட்டமாக சகஜமாக இருப்பது வழக்கம். அவ்வாறு தான், சுற்றுலா சென்ற மாணவ, மாணவியருடன், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வேறுபாடின்றி சகஜமாக இருந்துள்ளார்.

குறிப்பாக மிரட்டலுக்கு காரணமாக அமைந்திருப்பது, மாணவர்களுடன் முதல்வர் சீட்டாடுவது போன்றும், பஸ்சில் பாடலுக்கு அனைவரும் நடனம் ஆடுவது போன்றும், அருவியில் குளிக்கும் மாணவர்கள் அருகில், முதல்வர் பேன்ட் - சர்ட்டுன் இருப்பது போன்ற காட்சிகளுமே ஆகும். "இந்த படங்களை காட்டி அனைவரையும் நம்ப வைத்து விடுவேன். இதனால், உங்கள் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முடியும்' என, சுர்ஜிதாவை, முத்துராஜ் மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment