காமன்வெல்த் போட்டிக்கான கேம்ஸ் வில்லேஜில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் வில்லேஜ் அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலமாக சாக்கடைகளில் வந்து சேர ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னலிடம் கேட்டபோது நல்ல செய்தி தான் என்று கூறியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிக்காக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த அணிகள் டெல்லி யில் குவிந்துள்ளன.அனைத்து வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலம் ஏராளமான ஆணுறைகள் வந்து குவியத் தொடங்கியுள்ளனவாம். ஆணுறைகளைப் பயன்படுத்தி விட்டு அவற்றை பயன்படுத்தியோர், அதை டாய்லெட்டுகளில் போட்டு ஃபிளஸ் அவுட் செய்து விடுகின்றனர். இதனால் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பை சரி செய்யப் போனபோதுதான் டாய்லெட்டுகளில் ஆணுறைகள் போடப்பட்டதே தெரிய வந்தது.
இது லேசான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் பென்னலோ இதை நல்ல செய்திதானே என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்த அவர், இதைப் போய் கவலையுடன் கேட்கிறீர்களே. உண்மையில் இது நல்ல செய்தி. பாதுகாப்பான செக்ஸ் உறவு மேற்கொள்ளப்படுகிறது என்பது நல்ல செய்திதானே.
பாதுகாப்பான முறையில் எல்லாம் இருந்தால்தான் வீரர்கள், வீராங்கனைகளால் போட்டியில் சிறப்பாக பங்கேற்க முடியும்.அந்த வகையில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பென்னல்.
அத்தோடு நிற்காத பென்னல் மேலும் சிரித்தபடி, அதை விட முக்கியமாக அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் டாய்லெட்களை சுத்தப்படுத்துகிறார்கள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது. அதுவும் நல்லதுதான் என்றார்.
பின்னர் சற்று சீரியஸாக அவர் மாறி, பல ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு சர்ச்சையான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான விஷயம்தான் என்றார்.
பாதுகாப்பாக 'விளையாடினால்' எல்லோருக்கும் நல்லதுதானே...!
|
No comments:
Post a Comment