ஒஸ்தியின் எதிர்பாராத தோல்வியால் தரணி தலைகுனிவு?
துரைமுருகனின் பேட்டி சுடச்சுட ரெடியாகிக்கொண்டு இருந்தபோதே,சைதாப்பேட்டையில் நடந்த பா.ம.க-வின் பொதுக் கூட்டத்தில் தி.மு.க-வுக்கு எதிராக ஏகச் சீறலைக் காட்டி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
துரைமுருகனின் பேட்டி சுடச்சுட ரெடியாகிக்கொண்டு இருந்தபோதே,சைதாப்பேட்டையில் நடந்த பா.ம.க-வின் பொதுக் கூட்டத்தில் தி.மு.க-வுக்கு எதிராக ஏகச் சீறலைக் காட்டி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
அதில் துரைமுருகனின் 'முரசொலி' சீண்டலை கோடிட்டுக் காட்டிய ராமதாஸ், ''துரைமுருகனுக்கு பதில் சொல்ல எங்களின் வேல்முருகன் இருக்கிறார். எங்கே... எப்போது வேண்டுமானாலும் நாள் குறியுங்கள்... துரைமுருகனோடு தனி மேடையில் விவாதம் நடத்த எங்களின் வேல்முருகன் தயார்!'' என அறிவித்தார். அய்யாவே ஓப்பனாக கதவைத் திறந்த பிறகு, சும்மா இருப்பாரா வேல்முருகன். வாளை வீசினார் நம்மிடம்!
''எங்கள் கட்சி அடிக்கடி அணி மாறுவதாகவும், நம்பிக்கை துரோகம் செய்வதாகவும் துரைமுருகன் எழுதி இருக்கிறார். 1989-ல்தான் பா.ம.க. ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க-வோ 1967-ம் ஆண்டில் இருந்தே காங்கிரஸ், ஜனதாதளம், பி.ஜே.பி. என முரணான கட்சிகளுடன் கூட்ட ணியை அமைத்து வருகிறது. தாவுவதில் அவர்களின் சாதனையை எந்தக் கட்சியாலும் முறியடிக்க முடியாது! இந்திரா காந்தியைப் பற்றி அத்தனை அரசியல் நாகரிகங்களையும் தாண்டி விமர்சித்ததும் அவர்கள்தான். பின்னர், 'நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக!' என வாய்வலிக்கப் புகழ்ந்தவர்களும் அவர்கள்தான். அணி மாறும்போதும் எதுகை மோனைக் கவிதை பாடி சமாளிப்பதே அவர்களுக்கு வேலை. ஆனால், எங்களது மருத்துவர் அய்யாவுக்கு போலியாகக் கவிதை பாடவோ, துரைமுருகனைப் போல் அடுத்தவரை நையாண்டி செய்தோ பேசத் தெரியாது. இத்தனை ஆண்டுகால பொதுவாழ்வில் அதிக அரசியல் வியாபாரம் செய்தது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத்தெரியும்!''
''மகனுக்கு ராஜ்யசபா ஸீட் வழங்காததால்தான் ராமதாஸ் புலம்புவதாக துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே?''
''கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்தபோது... முடியாத வயதிலும் டெல்லிக்கு கிளம்பிப்போய் சோனியா காந்தியை நிர்பந்தப்படுத்தி, அரசியல் பேரம் நடத்தினாரே நம் முதல்வர் கருணாநிதி... அது யாருக்காகவாம்? தன் மகன், மகள், பேரன் என்ற குடும்ப உறவுகளுக்காகத்தானே! குடும்ப உறவுகள் அனைவருக்கும் பதவியை வாங்கிவிட வேண்டும் என அவர் நடத்திய பேரம் டெல்லியையே பரபரக்க வைத்ததே. பிரதமரின் பதவிப் பிரமாணத்தைக் காட்டிலும் கருணாநிதியின் பதவி பேரத்தைத்தானே அத்தனை வடக்கத்திய மீடியாக்களும் ஊன்றி கவனித்தன. அங்கே கட்சி நடப்பதே வாரிசுகளுக்காகத்தானே...
எங்கள் சின்னய்யாவுக்கு ராஜ்யசபா ஸீட் கேட்டதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அதற்காக நாங்கள் தி.மு.க-விடம் பேரம் நடத்தவில்லை. சட்டமன்றத்தில் மேலவையைக் கொண்டு வரவேண்டும் என்பது கலைஞரின் கனவுத் திட்டம். அதற்கான தீர்மானம் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அப்போது முதல்வர் கருணாநிதியும் துணை முதல்வர் ஸ்டாலினும் எங்கள் சின்னய்யாவை தொடர்புகொண்டு பேசினார்கள். அன்றைக்கு, 'எங்களின் 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டுமானால், எனக்கு ராஜ்யசபா ஸீட் தருவதாக எழுதித் தர வேண்டும்!' என எங்களின் சின்னய்யா கேட்டிருந்தால், தி.மு.க-வால் மறுத்திருக்க முடியுமா? அத்தகைய அரசியல் பேரத்தை எங்களின் சின்னய்யா நடத்தினாரா? 'மூத்த அரசியல் தலைவரின் கனவு பலிக்க இருக்கும் நேரத்தில் நாம் அவரை நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது' என எங்களைப் போன்றவர்களை அமைதிப்படுத்தியவர் சின்னய்யா. அவருடைய பெருந்தன்மைக்கு முன்னால் வாய் நிறையப் பேசும் துரைமுருகனோ, அவருடைய இயக்கமோ நிற்க முடியுமா?''
'''மகனுக்கு ஸீட் கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் ராமதாஸ் ஓட்டுப் போடுவார்!' என துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே?''
''சின்னய்யாவுக்கு ஸீட் வாங்க நினைத்திருந்தால், நாங்கள் அ.தி.மு.க-விடமே வாங்கி இருக்க முடியும். பென்னாகரம் இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள் என்னிடம் பேசினார்கள். 'அன்புமணிக்கு ஸீட் தருகிறோம். திண்டிவனம் வழக்கை வாபஸ் பெறுகிறோம். நாம் பென்னாகரம் தேர்தலில் கூட்டணியாக நிற்போம்!' எனப் பேசினார்கள். சின்னய்யாவின் பதவிதான் முக்கியம் என நினைத்து இருந்தால்... எங்கள் அய்யா அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓகே சொல்லி இருப்பாரே..? சின்னய்யாவுக்கான ஸீட் விஷயத்தில் நாங்கள்உண்மை யாகவே கலைஞரை மட்டுமே நம்பினோம். எங்களின் நம்பிக் கையைப் புதைத்து துரோகம் செய்தவர்களுக்கு எங்களைப் பழித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை!''
''பா.ம.க. தயவு இல்லாமலே வரும் தேர்தலில் தி.மு.க. ஜெயிக்க முடியும் என அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சொல்லி வருகிறார்களாமே?''
''வெற்றி - தோல்வி என்பது அரசியலில் சகஜம். அதில் எது வந்தாலும் அதை ஏற்கும் வல்லமையும் மனோ திடமும் எங்களுக்கு இருக்கிறது. ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் வீழ்ந்தாலும், பென்னாகரம் இடைத் தேர்தலில் நாங்கள் தனித்து களம் இறங்கினோமே... எங்களை வெல்ல அத்தனை அமைச்சர்களையும் திரட்டி 70 கோடி பணத்தை இறைக்க வேண்டிய இக்கட்டுக்கு ஆளும் கட்சி ஆளானதே.... 91-ல் தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இல்லை. அந்தத் தேர்தலில் தி.மு.க. ஜெயித்த இடம் ஒன்று. அதேபோல் நாங்களும் அந்தத் தேர்தலில் ஒரு ஸீட் வென்றோம். இப்போதும் சவால்விட்டுச் சொல்கிறோம்... சுய பலத்தை மட்டுமே நம்பி, கூட்டணியைத் தவிர்த்துவிட்டு களம்காண தி.மு.க. தயாராக இருந்தால்... நாங்கள் இப்போதே தனித்து நிற்கத் தயார்! ஆனால், தனித்து நிற்கிற தகுதியோ வல்லமையோ தி.மு.க-வுக்குக் கிடையாது. இந்த சவாலை ஏற்க தி.மு.க.
|
No comments:
Post a Comment