நபரொருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 'அவர்களது உடலை வந்து எடுத்து செல்' என்று தொலைபேசி மூலம் தனது முன்னாள் மனைவிக்கு தகவல் வழங்கிய கொடூர சம்பவமொன்று லண்டனில் இடம்பெற்றுள்ளது.
ஜேன் பிரான்ஸில் சே (வயது 62) என்பவரே இவ்வாறு தனது முன்னாள் மனைவியான அட்ஜோவின் (வயது 44) எட்டு வயது மகளான ரெஜினாவையும் 10 வயது மகன் ரோல்ஸையும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இவர் மேற்படி மூவரையும் தனது தொடர்மாடி வீட்டின் 3 படுக்கையறையில் இருந்து விரட்ட வேண்டுமென்று ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நபர் தனது பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ஒவ்வொருவரது கழுத்தையும் கத்தியினால் மிகவும் கொடூராமாக அறுத்து கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின் மேற்படி நபர் அட்ஜோவை தொடர்பு கொண்டுள்ளதுடன் பேஸ்புக்கில் 'நான் உனது இரு பிளைகளையும் கொன்று விட்டேன், கொன்று விட்டேன். எனவும் நான் பொலிஸாருக்கு தகவலை வழங்கிவிட்டேன், அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறேன்' என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்நபர் 999 என்ற அவசரபிரிவு இலக்கத்தை தொடர்புக்கொண்ட பின் அட்ஜோவின் தொலைப்பேசி இலக்கித்திற்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி 'வந்து உனது பிள்ளைகளின் உடலை எடுத்துச் செல்' என்று தெரிவித்துள்ளார்.
மேற்படி சிறுவர்களின் உடல்களை பொலிஸார் கடற்கரையோரத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர். அவர்கள் பல மணித்தியாலங்களுக்கு முன்பே இறந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸார் மேற்படி நபரின் வீட்டை சோதனை செய்த போது சே எழுதிய குறிப்பொன்றை கண்டெடுத்துள்ளனர். அந்த குறிப்பில், 'நான் இவர்களை ஏன் கொலை செய்தேன் என்பதற்கு இந்த குறிப்பு ஓர் ஆதாரம்' என குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வழக்குரைஞர் எட் புரோவ்ன், நீதிமன்றில் தெரிவிக்கையில், 'ஒரு நாள் காலை இவர் தனது சொந்த பிள்ளைகளின் உயிரை அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையிலே பறித்துள்ளார்' இச்சம்பவமானது வீட்டு வன்முறைக்கு ஓர் உதாரணமாக வரலாற்றில் பதியப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்'.
ஆபிரிக்காவை சேர்ந்த மேற்படி இருவரும் கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த பின் அட்ஜோ தனது பிள்ளைகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே வட லண்டனிற்கு மாற்றியுள்ளார்.
|
No comments:
Post a Comment