தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழி திரைப்பட நாயகர்களுக்கு இடையிலான செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) போட்டி நடைபெற இருக்கிறது. இம்முறை 2 புதிய அணிகள் இணையலாம் என்று எதிப்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு அணியையும் விளம்பரப்படுத்துவதற்கு BRAND AMBASSADOR-ஐ ஒப்பந்தம் செய்வார்கள். இம்முறை சென்னை அணிக்கு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று பேச்சுகள் நிலவின.
இந்நிலையில் CCLல் BRAND AMBASSADORக்கு நிலவி வந்த போட்டியில் இருந்து விலகி விட்டாராம் த்ரிஷா. விஷால் உடன் இணைந்து 'சமரன்', தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் இணைந்து 'தம்மு' ஆகிய படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருப்பதால் தான் இந்த முடிவு என்று கூறுகிறார்கள்.
தற்போது BRAND AMBASSADOR போட்டிக்கு முன்னணியில் இருப்பவர் அமலா பால். கண்டிப்பாக அவர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று கூறி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வருபவர் BRAND AMBASSADOR ஆக ஒப்பந்தம் செய்யப்பட்டால் இன்னும் பிரபலமாகலாம் என்பதால் அமலாபால் இந்த வாய்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறாராம்.
|
No comments:
Post a Comment