Friday, December 9, 2011

ரூ 9,000 கோடி சொகுசு வீட்டில் குடியேறும்

அன்டிலியா... உலகின் மிக மிக காஸ்ட்லியான சொகுசு வீட்டின் பெயர் இது.


மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர், விரைவில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராகவிருக்கும் முகேஷ் அம்பானி.

விரைவில் குடும்பத்துடன் இந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறுகிறார் முகேஷ் அம்பானி.
4,00,000 சதுர அடியில், மாடியில் மூன்று ஹெலிபேட்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட வீட்டின் மதிப்பு ரூ 9,000 கோடிகள்.

இந்த வீட்டின் ஒவ்வொரு மாடியும் சாதாரண வீடுகளை விட இருமடங்கு உயரம் கொண்டவை. 570 அடி உயரத்தில் இருந்தாலும் மொத்தம் 27 மாடிகள் மட்டுமே உள்ளன. சாதாரணமாக இந்த உயரத்துக்கு 60 மாடிகள் வரை கூட கட்டலாம் என்கிறார்கள் கட்டடக் கலை வல்லுநர்கள். ஒவ்வொரு மாடியும் புதிய வடிவிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.

பிரமாண்ட வட்ட வடிவ அறைகள், அவற்றின் கூரையில் பார்க்குமிடமெல்லாம் கிரிஸ்டல் சரவிளக்குகள், 9 லிப்டுகள் என கேட்பவரை திக்குமுக்காட வைக்கும்படி உள்ளது இந்த வீட்டின் வசதிகளும் செல்வச் செழிப்பும்.

கார் பார்க்கிங்குக்கு மட்டுமே 6 அடுக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 160 கார் களை நிறுத்தலாம்.

டல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பெர்கின்ஸ் மற்றும் வில் அண்ட் ஹ்ரிஷ்க் பெண்டர் நிறுவனங்கள் இந்த கட்டடத்தை வடிவத்துள்ளன.

வீட்டுக்குள்ளேயே சர்வதேச தரத்தையும் மிஞ்சும் ஸ்பா சென்டரும், 50 பேர் மட்டும் அமர்ந்து பார்க்கும் வகையில் குட்டி தியேட்டரும் உள்ளது.

மொத்தம் 600 பணியாளர்கள் இந்த வீட்டை பராமரிக்க அமர்த்தப்பட்டுள்ளனர். வீட்டின் ஒவ்வொரு பொருளும் உலகின் மிகச்சிறந்த தயாரிப்பாக இருக்க வேண்டும் என பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எடை குறைந்த குழந்தைகளை அதிகம் கொண்ட நாடாக ஒரு பக்கம் இந்தியா திகழ்கிறது. மறுபக்கம் இப்படி படோடபமாகவும் இருக்கிறது!.

No comments:

Post a Comment