என்னதான் செய்கிறது Orabrush? மற்றும் 404. பல் துலக்குவது என்பது பல நூறுஆண்டு களாக நிகழ்ந்து வருவதுதான். பல், நாக்கு, உள் கன்னம் உட்பட்ட வாயின் நலனைப் (Oral Cre) பேணப் பயன்படும் பிரஷ், ஃபேஸ்ட் இத்யாதி களுக்கு இந்தப் பூமியின் மாந்தர்கள் 26 பில்லி யன் டாலர்களை 2009-ம் வருடத்தில் செலவு செய்தனர் என்கிறது பிசினஸ் புள்ளிவிவரம். பொருளாதாரரீதியில் வளர்ந்து வரும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் பாரம்பரிய மாகப் பயன்படுத்தி வந்தவற்றை (ஆல்/வேல் குச்சி இத்யாதி) விட்டுவிட்டு, பிரஷ்/ஃபேஸ்ட்டுக்கு மாறி இருப்பது, இந்த நாடு களின் வாய் நலச் செலவுகள் அதிகரிப்பதில் இருந்து தெரிகிறது.
பிரஷ்/ஃபேஸ்ட் போன்ற பொதுமக்கள் நுகர்வு சமாசாரங்களை மக்களிடையே பிரபலப்படுத்த நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் விளம்பரங்களைச் செய்வ துதான் இன்று வரை அதன்வணிக முன்னேற்றத்துக்காகச் செய்யப் படும் முயற்சி. பத்திரிகை, டி.வி, ரேடியோ எனப் பாரம்பரிய ஊட கங்கள் மட்டுமே இதுவரை வாய் நலப் படைப்புகளைப் பிரபலப்படுத்தப் பயன்பட்டு வந்தன.
மிகப் பிரமாண்டமாக விளம்பரப்படுத்தினால் மட்டுமே, மக்களைச் சென்றடைய முடியும் என்பதால், மிகப் பெரிய நிறுவனங் கள் மட்டுமே வாய் நலம் சம்பந்தப் பட்ட பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்த முடியும் என்பதும் உண்மை.
என்னதான் செய்கிறது Orabrush?
படு சிம்பிளான வாய் நலப் பொருளான Tongue Cleaner ஒன்றைத் தயாரித்து விற்கிறது இந்த நிறுவனம். 'நாக்கில் சேகரமாகும் பாக் டீரியா இத்யாதிகளினால், உங்கள் மூச்சுக் காற்றே மற்றவர்களை அருகில் வர முடியாமல் செய்துவிடும் அபாயம் இருக்கிறது; எங்களது Tongue Cleaner-ஐப் பயன்படுத்தினால், இந்த அபாயத்தைத் தவிர்க்கலாம்’ என்பதுதான் இவர்களது மார்க்கெட்டிங் மெசேஜ். இது போல நூற்றுக்கணக்கான போட்டி Tongue Cleaner-கள் இருக்க, இந்த நிறுவனம் படு ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டு நடத்திய சமூக ஊடகம் சார்ந்த மார்க்கெட்டிங் வெகு விரை வில் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்படும்.
'பல நிறுவனங்கள் சமூக ஊடகங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டபடியே இருக்க, நாங்கள் அதைச் செயலில் கொண்டுவந்தோம்' என்று சொல்லும் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் டேவிஸ் செய்த சமூக ஊடகச் செயல்பாடுகள்...
யு டியூப் தளத்தில் வாய் நாற்றம் பற்றி நக்கலான தீம்கொண்ட 30 வீடியோக்களைப் பதிவேற்றம் செய்தது. இதைப் பார்த்தவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதன் மூலமாக வைரல் விளைவை ஏற்படுத்தியது. யு டியூப் பயனீட்டாளர்கள் பலர் தாமாகவே சில கிண்டல் வீடியோக்களைப் பதிவேற்ற, கிடுகிடுவென விளம்பரம் கிடைக்கத் தொடங்கியது. சில மாதங்களுக்குள், Orabrush-க்கான யு டியூப் சேனலில் இணைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டியது. இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்தக் கணத்தில், இந்த சேனலில் இருக்கும் வீடியோக்கள் 34 மில்லி யன் தடவை பார்க்கப்பட்டு உள்ளன. www.youtube.com சென்று Orabrush என்று தட்டிப் பாருங்களேன்.
இந்த Tongue Cleaner-ஐ முதல் முறையாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டுமானால்,
உங்களுக்கு அதை இலவசமாக அனுப்பி வைப்பார்களாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, மூன்று: 1.Orabrush நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் விசிறியாக வேண்டும். 2. அவர்களது டிவிட்டர் பக்கத்தை Follow செய்ய வேண்டும் 3. யு டியூப் சேனலில் இணைய வேண்டும்... மேற்கண்ட செயல்கள் கொண்டுவரும் வைரல் விளைவுகள் அற்புதம். உதாரணத்துக்கு, நான் ஃபேஸ்புக் பக்கத்தில் விசிறியாக இணைந்ததை எனது நண்பர்கள் பார்ப்பார்கள். அவர்களில் சிலர் இணையக்கூடும். அதைப் பார்க்கும் நண்பரின் நண்பர் களில் சிலர் இணையக்கூடும்... இப்படிக் கிடுகிடுவென பல மில்லியன் மக்களைச் சேர்ந்தடையும் வலிமையை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறது இந்த நிறுவனம்.
இணையதளம், சமூக ஊடகம் மட்டும் அல்லாமல், மொபைல் தொழில்நுட்பத்தையும் லாகவமாகக் கையாள்கிறது இந்த நிறுவனம். இவர்களது ஐ-போன் அப்ளிகேஷனின் இயக்கம் இவர்களது ஜாலி/கேலி/கிண்டல் மார்க்கெட்டிங் திட்டத்தின் அடுத்தபடிஎன்று சொல்லலாம். இதை இயக்கி, வாய் நறுமண மாக இருக்கிறதா அல்லது துர்நாற்றத்தின் உறைவிடமாக இருக்கிறதா என்பதை ஐ- போனில் ஊதித் தெரிந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்று வியப்படைய வேண்டாம்; சாத்தியம் அல்ல.
ஆனால், நீங்கள் குறிப்பிட்ட பட்டனின் மேல் பக்கத்தில் அழுத்திவிட்டு ஊதினால், உங்கள் மூச்சுக் காற்று மோசம் என்றும், கீழ்ப் பகுதியில் அழுத்தி இதே சோதனையை செய்தால் மூச்சுக் காற்று அற்புதம் என்றும் பலவிதமான கிண்டல் குரல்களில் சொல்கிறது இந்த மென்பொருள்.
வாய் நலம் பற்றி நிறையப் பேசியாகிவிட்டது. சென்ற சில வாரங்களில் டெக் உலகில் பட்டையைக் கிளப்பும் வாட்சனைப் பற்றி பேசாமல் இருப்பது தவறு. ஐ.பி.எம் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டரான வாட்சன் மிகப் பிரபலமான ஜெப்பர்டி ஷோவில் கலந்து வெற்றி பெற்றது, செயற்கை அறிவுத் (Artificial Intelligence) துறையின் முக்கிய மைல் கல். வாட்சனின் திறமைகளையும், இதன் எதிர்கால விளைவுகளையும் பார்க்கலாம்!
|
No comments:
Post a Comment