மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால்(?), அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.
அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களை விட இந்த தீபாவளிக்கு வெளிவந்த 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். இதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாகவும், ஆர்வமாகவும் இருக்கிறது. பல வரிசையான தோல்விப் படங்களுக்குப் பிறகு இப்படியொரு அருமையான ஹிட் படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி எனக் கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.
ஆனால் இந்த வேலாயுதம் ஊடகம் சம்பந்தப்பட்ட படம் என்பதால், டைட்டில் கார்டில் ஜெயா டிவிக்கு நன்றி என்பதில் தொடங்கி, ஜெயா டிவி, ஜெயா நியூஸ் என்று படம் முழுக்க ஒரே ஜெயா டிவி மயம்தான். ஒரு வேலை விஜய் ஜெயா டிவிக்கு விளம்பர தூதுவராக மாரிவிட்டாரோ என சந்தேகம் எழுகிறது.
வேலாயுதம் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் விஜய் , என் கட்சி ஒரேகட்சி..... என்று சின்ன இடைவெளி விட்டு மீண்டும் ’தங்கச்சி’ என்று அரசியல் வசனம் வெடிக்கிறார் விஜய். மேலும் இன்னொரு காட்சியில் இவர் இந்த மண்ணை ஆண்டாரு.. மக்களை ஆண்டாரு... அடுத்து மாநிலத்தையே..... என்று கிரேன் மனோகர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, விஜய் வேண்டாம் என்று சைகை செய்ய, நீங்க வேண்டாம்னு சொல்லுறதால சொல்லல என்று நிறுத்திக்கொள்கிறார்.
இப்படியாக பல இரட்டை அர்த்த அரசியல் வசனங்கள் படம் முழுதும் உள்ளது, இதையெல்லாம் பார்க்கும்போது விஜயின் ஆரசியல் ஆர்வம் பெரியதாகவே தெரிகிறது.
|
No comments:
Post a Comment