Wednesday, December 7, 2011

அந்த மாணவியை நிர்வாண சோதனை செய்யவில்லை. ஆனாலும் தீக்குளித்து தற்கொலை..

திரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..

பாவம் இந்த மாணவி காப்பியடிக்கவில்லை.. இந்த மாணவியை நிர்வான சோதனை செய்யவில்லை... திருடி என்று தலைமை ஆசிரியர் திட்டிவிட்டார்.. காரணம்.. தலைமை ஆசிரியர் பையில் வைத்து இருந்த ரூபாய் 500யை திருடி விட்டதாக ஆசிரியர் இந்த பெண்ணை திட்டஅவமானத்தால் இந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்... இது நான்கு நாளைக்கு முன் நடந்த கொடுமை இது...
தமிழகத்தின் கடை கோடி கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் இப்போதும் ஆசிரியர்களின் சைக்கிள்,டீவிஎஸ்50 போன்றவற்றை துடைத்து வைப்பது மாணவச்செல்வங்கள்தான்... அப்படி வாத்தியாரின் வாகனத்தை துடைத்து வைக்கும் பசங்களுக்கு ஆசிரியர் லீடர் போல ஒரு பதவி கொடுத்து வைப்பார்... அவன் கை காட்டும் பசங்களுக்கு கேள்வி கேட்காமல் உதை விழும்... ஆசிரியருக்கு குளோசாக இருக்கு இது போலான உதவிகள் ஆசிரியர்களுக்கு செய்வது வழக்கம்

சில இடங்களில் வாத்தியாரின் மேல் உள்ள அன்பு காரணமாக தானே சில வேலைகள் மாணவ மாணவிகள் இழுத்துப்போட்டுக்கொண்டுசெய்வதும் உண்டு....
ஆனால் பிள்ளைகளை வேலைவாங்காமால் கொடுக்கும் சம்பளத்துக்கு உண்மையாய் நேர்மையாய் இருக்கும் ஆசிரியர்களை நான் பார்த்து இருக்கின்றேன்... என்னை சுற்றி நிறைய ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்..

நான் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு டீச்சர் பெயர் வேண்டாம்... அவர் சரியாக ஒரு பையனை பதினோரு மணிக்கு அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அவர் வீட்டுக்கு அனுப்புவார்.. வீட்டு சாவியை கொடுத்தே அனுப்புவார்... அவன் ஆப்பிள் அல்லது திராட்சை வீட்டில் இருந்து எடுத்து வந்து கொடுப்பான்..50 பிள்ளைகள் எதிரே உட்கார்ந்து இருக்கும் போது நன்றாக ஆப்பிளை கடித்து ரசித்து ருசித்து சாப்பிடுவார் அந்த டீச்சர்....

நானே அந்த வயதில் வாயில் உமிழ் நீர் சுரக்க டீச்சர் கடிக்கும் ஆப்பிளை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருக்கின்றேன்..தினமும் டீச்சர் வீட்டுக்கு போய் ஆப்பிள் அல்லது திண்பண்டம் எடுத்து வர ஒரு பெரிய போட்டியே மாணவர்கள் மத்தியில் இருக்கும்..... நான் சொல்வது 1982 களில்.....


இப்படி மாணவர்கள் வீட்டுக்கு போய் திண்பண்டம் எடுத்து வருவதை நெஞ்சில் ஈரம் இருக்கும் அப்போதைய ஆசிரியர்கள் பலர் இதனை கண்டித்து இருக்கின்றார்கள்... அவர்கள் முன் வைத்த ஒரே கேள்வி.. வீட்டுக்கு போகும் வழியில் பையன் எதாவது ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டால்... யார் பதில் சொல்வது என்பதுதான்...

ஆனால் அந்த டீச்சர் அதை பற்றி எல்லாம் கவலைபட்டதில்லை.... கடைசிவரை ஆப்பிள் மற்றும் தேநீர் வாங்கி வர பசங்கள் போய் வருவார்கள்.. கும்பகோணத்தில் ஒரு பஞ்சாயத்து பள்ளியல் படிக்கும் சூர்யா என்ற பெண்ணிடம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி விடும் போது தனது கைப்பையை தனது வாகனத்தில் வைக்க மாணவி சூர்யாவை அனுப்பி இருக்கின்றார்...


போகும் வழியில் பணம் கிழே விழுந்து இருக்கின்றது... விழுந்த பணத்தை எடுத்து டீச்சரின் கைப்பையில் வைக்கும் போது டீச்சர் பார்த்து விட்டார்.சூர்யாவை திருடி என்று சொல்லி தகாதவர்த்தை சொல்லி பல மாணவர்கள் முன்னிலையில் திட்டி இருக்கின்றார்... இது நடந்தது கடந்த பதினோராம் தேதி மாலையில்...அன்று இரவே உடலில் மண்ணெண்னை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அந்த அப்பாவி பெண்ணிடம் காலதேவன் ஜெயித்து விட்டான்....




இப்போது அந்த எட்டாம் வகுப்பு பெண் சூர்யா இந்த பூவுலகில் இல்லை.. தனது கைப்பையை தானே வைத்து இருந்தால் ஒரு பெண்ணின் உயிர் போய் இருக்காது....கைப்பையை தனது வாகனத்தில் வைக்க சொன்னதால்தான் அந்த பெண் இந்த பிரச்சனையில் மாட்டி இருக்கின்றாள்...அப்படியே அந்த பணத்தை திருடியதை பார்த்து இருந்தால் அந்த பெண்ணை தனியாக அழைத்து ஏன் அப்படி செய்தாய் என்று கண்டித்து இருக்கலாம்.....


மாணவி மீது திருடி பட்டம் சுமத்திய டீச்சரின் பையன் ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் ஆசையில் ஒரு திண்பண்டத்தை திருடிவிட்டால் இப்படித்தான் பொது இடத்தில் வைத்து மானத்தை வாங்குவது போல நடந்துக்கொள்வாரா?? இத்தனைக்கும் அவர் சாதாரண டீசசர் அல்ல அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்.


வாத்தியார் மர நிழலில் விட்டு இருக்கும் சைக்கிளை பள்ளி முடிந்து வாத்தியார் கிளம்ப இருக்கும் போது கொஞ்சம் பெரிய பையன்களிடம் ஆசிரியர் சாவி கொடுத்து அனுப்புவார்... மாணவர்கள் அந்த சைக்கிள் பூட்டை திறந்து வாத்தியார் முன் எடுத்து வந்து சைக்கிளை நிறுத்துவார்கள்.. அது போலான ஒரு செயல்தான் இது.. இது போலான செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் இருக்கின்றன...

எனக்கு தெரிந்து பிள்ளைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதை விட முதலில் ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது எனது கருத்து....இந்த இரண்டு வாரத்தில் இறந்து போனது எல்லாம் பெண்பிள்ளைகள். 


தொலைகாட்சியில் அறிவுள்ள நிகழ்ச்சிகளை எந்த குடும்பமும் பார்ப்பதில்லை.. பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்களில் எந்த பிரச்சனைக்கு கதாபாத்திரங்கள் சிறியவரோ அல்லது பெரியவரோ தற்கொலையை தேர்ந்து எடுப்பதை பல தொடர்களில் பார்த்து இருக்கலாம்.. காரணம் அவர்கள் டீஆர்பி ரேட்டிங்....அதன் பாதிப்பு இப்போது எல்லா இளையதலைமுறையிடம் நிறைய இருக்கின்றது என்பதை மறுப்பதற்க்கில்லை...எல்லாத்துக்கும் தற்கொலைசெய்துகொள்ளலாம்
என்றமனப்பான்மை..... 

முன்பு போல் பிள்ளைகளிடம் சகிப்புத்தன்மை குறைந்து போய்விட்டது.. அது பற்றி தனியாக வேறு ஒரு பதிவில் பேசுவோம்..


பள்ளியில் அத்தனை பிள்ளைகள் முன்னிலையில் திருடி என்று பட்டம் சூட்டி கை காலை முறித்துவிடுவேன் என்று சொன்னால் அந்த எட்டாம்வகுப்பு பெண் என்ன செய்யமுடியும்??? மண்ணெண்ணையை நாடுவதை தவிர வேறு வழியில்லை.... 







சரி இது போலான நிகழ்ச்சி செல்வந்தர் பிள்ளைகள் படிக்கும் பள்ளியல் படிக்கும் மாணவிகள் திருடி இருப்பதை பார்த்து விட்டால்,அந்த மாணவிக்கு தனி அறையில் கவுன்சிலிங் செய்வார்கள்..திருடுவது காப்பி அடிப்பது தவறு என்று தனி அறையில் கண்டிப்பார்கள்...

தொடர்ந்து பள்ளி ,கல்லூரியில் படிக்கும் முக்கியமாக பெண் பிள்ளைகள் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கதையாகி விருகின்றது....நன்றாக யோசித்து பாருங்கள் இது போலான தற்கொலைகள் எல்லாம் ஏழ்மை மற்றும் கிராமபுறபகுதி மாணவியர் மீது தொடர்ந்து திணிக்கபடுகின்றன.. 




ஏனென்றால் அவர்களைத்தான் சகட்டு மேனிக்கு திட்ட முடியம்..பத்மாசேஷாத்திரி, பொன்வித்யாசரம் போன்ற பள்ளிகளில் இது போலான தவறு நடந்தாலும் மாணவிகளால் நிகழ்த்தி இருந்தால் அவர்களை பல பேர் முன்னிலையில் திட்ட முடியாது.. காரணம் அந்த பிள்ளைகளின் அப்பா கலெக்ட்ராகவோ அல்லது ஐஜியாகவோ இருப்பார்கள்.


என்னவோ தெரியவில்லை.. பொதுபுத்தியில் இது போலான விஷயங்களை இப்படித்தான் பார்க்க தோன்றுகின்றது...எனது வாழ்க்கை முறை தவறோ??

No comments:

Post a Comment