2012ம் ஆண்டில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் தமிழ் படங்கள் சில வெளியாக இருக்கின்றன.
ரஜினி - 'கோச்சடையான்', கமல் - 'விஸ்வரூபம்', விஜய் - 'நண்பன்', அஜீத் - 'பில்லா 2', சூர்யா - 'மாற்றான்', விக்ரம் - ' தாண்டவம்',சிம்பு - ' வேட்டை மன்னன்', தனுஷ் - ' 3 ', ஆர்யா, மாதவன் - ' வேட்டை ' என அனைத்து படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
இவ்வாறு அனைத்து நடிகர்களின் படங்களும் வெளிவர இருப்பதால் ரசிகர்கள் எந்த படத்தினை அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கிறார்கள் என்று சினிமா amanushyam இணையத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு நேற்றோடு (டிசம்பர் 06) முடிவடைந்தது.
விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம் - 1,19, 668 வாக்குகளும், 'பில்லா-2' திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன.
|
No comments:
Post a Comment