Google Search Tips
குறிப்பிட்ட பைல் (FILE) வகைகளை தேடுவது எப்படி:
இணையதளத்தில் PDF, DOC, JPG போன்ற பல FILE வகைகளை தேடுவதற்கு சர்ச் செய்வதற்கான சொல்லுடன் ஒரு Colon (:) சேர்த்து பின்னர் FILE டைப் ஐ குறிப்பிடவும்.
எடுத்துக்காட்டாக Steve Jobs சம்பந்தப்பட்ட FILE வகைகளை தேடுவதற்கு
“Steve Jobs:PDF“ என டைப் செய்தால் அது எளிதில் டவுன்லோட் செய்யக்கூடிய FILEவகைகளை மட்டும் தேடி தரும். (www.kalvikalanjiam.com)
GOOGLE - File type search
குறிப்பிட்ட விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகை தகவல் பற்றி அறிந்து கொள்ள:
குறிப்பிட்ட விமானத்தின் முழு பெயரை டைப் செய்தால் போதும். வருகை மற்றும் புறப்பாடு குறித்த விவரங்களை காட்டி விடும். (www.kalvikalanjiam.com)
Eg: Air India 346
GOOGLE - Airline Departure and Arrival Search
குறிப்பிட்ட விமானத்தின் அட்டவணை தெரிந்து கொள்ள:
“flight from ” என டைப் செய்து புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை டைப் செய்தால் எத்தனை விமானங்கள், எவ்வளவு நேர பயணம், கிளம்பும் நேரம், சேரும் நேரம், விமானத்தின் பெயர் போன்ற முழு விவரங்களையும் காட்டி விடும்.(www.kalvikalanjiam.com)
GOOGLE - Airline Schedule Search
GOOGLE - Airline Schedule List
ஒரு இணையதளத்துடன் சம்பந்தப்பட்ட பிற இணையதளங்களை தேட:
ஏதேனும் ஒரு இணையதளம் நமக்கு மிகவும் பிடித்து விட்டால் இது போன்ற செய்திகளை தரும் மற்ற இணையதளங்களை தேடும் ஆர்வம் ஏற்படும். கூகுல் இந்த வேலையே மிகவும் எளிதாகி விட்டது. “related :” என டைப் செய்து நீங்கள் விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்தால் போதும். அது போன்ற செய்திகளை தரும் பிற இணையதளங்களை காட்டி விடும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட இணையதளங்கள் இந்த சர்ச் வகைக்கு பொருந்தாது.(www.kalvikalanjiam.com)
GOOGLE - Related Website Search
தேவையில்லாத தகவல்களை தவிர்க்க:
நாம் கூகுளே இல் சர்ச் செய்யும் பொது நமக்கு தேவையல்லாத சில முடிவுகளை தரும். இதனால் சரியான தேடுதலை பெற உங்கள் வார்த்தைகளை Double Quotes (” “) இன் உள்ளே டைப் செய்தால் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தை உள்ள தகவலை மட்டுமே தேடி தரும். தேவையில்லாத தகவல்கள் இந்த சர்ச் இல் இடம்பெறாது.(www.kalvikalanjiam.com)
எடுத்துக்காட்டாக: “nobel prize 2011″ என டைப் செய்தால் 2011 ஆண்டுக்கான நோபல் பரிசு பற்றிய விவரங்களை மட்டுமே தேடி தரும்.2010 ஆம் ஆண்டுக்கானநோபல் பரிசு விவரங்கள் போன்ற தேவையில்லாத தகவல்களை தவிர்த்து விடும்.
GOOGLE - Exact Search
தேடல் தொடரும்…
|
No comments:
Post a Comment