MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினி நடித்து உருவாக இருக்கும் படம் ‘ கோச்சடையான்’. கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்பையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க EROS நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ‘கோச்சடையான்’ கதை விவாதம் ஜோராக நடைபெற்று வரும் இந்த வேளையில் இன்று தமிழ் திரையுலகில் பரபரப்பாக ஒரு செய்தி பரிமாறப்பட்டு தீப்போல பரவி வருகிறது.
‘கோச்சடையான்’ படத்தினை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம் ரஜினி. ‘நண்பன்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்றதால் ரஜினி படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம் ஷங்கர். ‘கோச்சடையான்’ படம் MOTION CAPTURE TECHONLOGY மூலம் உருவாவதால் இப்படத்தில் நடிக்க ரஜினி வெறும் 10 முதல் 20 நாட்கள் ஒதுக்கினால் போதுமாம். இதனை முடித்து கொடுத்து விட்டு ஷங்கர் படத்திற்கு தயாராக இருக்கிறாராம் ரஜினி.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க அட்வான்ஸ் கூட கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. படத்தில் யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள், யார் தயாரிப்பாளர் என்பது எல்லாம் சஸ்பென்ஸாக இருந்து வருகிறதாம்.
இவ்வாறு ரஜினி நடிக்க போகும் படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலோ ” ரஜினியை யார் இயக்கினாலும் பரவாயில்லை. ரஜினியை திரையில் பார்ப்பது எப்போது ? ” என்று ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.
|
No comments:
Post a Comment