பிரசவம் நடந்த ஒரு மாதத்தில் மீண்டும் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடக்குமா? அதிசயம் என்பீர்கள்! அந்த அதிசயம் தினமலர் பத்திரிக்கையின் வாயிலாக நடந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்ஜித் கவுர் என்ற கர்ப்பிணிப்பெண் தன் கணவருடன் டொரொண்டோ நகருக்குக் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி டெல்லி விமானநிலையத்திலிருந்து அதிகாலை 1.45 க்குப் புறப்பட்ட விமானத்தில் பயணமானார். விமானம் கஜகஸ்தான் பகுதியில் பறந்து கொண்டிருந்த வேளையில், அவருக்கு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து நடுவானில் விமானத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
இச்செய்தியினை நேரம், இடம், பெயர் விவரங்களுடன் அடுத்த நாள் 23 ஆம் தேதி தன் பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்ட தினமலர், சரியாக ஒரு மாதம் கடந்து நவம்பர் 23 ஆம் தேதி மீண்டும் அதே செய்தியினை வெளியிட்டுள்ளது. பிரசவம் நடந்த ஒரு மாத காலத்தில் மீண்டும் அதே பெண்ணுக்குப் பிரசவம் நடத்திய தினமலருக்கு வாழ்த்துக்கள்!!
|
எதற்கெடுத்தாலும் வக்கணையாக பேசும் டவுட் தனபாலு இதுக்கு என்ன சொல்வான்?
ReplyDelete