ராதாபுரத்தில் அடுத்த சர்ச்சை ஆரம்பம்
ஒருவழியாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டியிருக்கிறார் முதல்வர். ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ.வான அப்பாவு, தமிழக முதல்வரின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் பெயரை சூட்ட முயற்சித்து, பேருந்து நிலையம் முன்பு முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் சிலைகளையும் நிறுவினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்ப... பேருந்து நிலையத் திறப்பு விழாவுக்காக கடந்த வருடம் துணை முதல்வர் ஸ்டாலின் பெயரிடப்படாத பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு, சிலைகளைத் திறக்காமல் திரும்பினார்.
இதற்கிடையில் ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியே தீர வேண்டும் என்று கோரி, சுடலைமுத்து நாடார் என்ற தியாகி தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டு வந்தார். மேலும், ‘‘கலைஞரின் பெற்றோர் என்ன தியாகிகளா?’’ என்று கேட்டு ஜெயலலிதாவும் அறிக்கை விட்டார். ஆனாலும், ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமாரை வைத்து கலைஞரின் பெற்றோரின் சிலைகளை திறந்து விட்டார் அப்பாவு.
இந்நிலையில் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதிக்கு முதல்நாள், தியாகி சுடலைமுத்துவும், சிவாஜி முத்துக்குமார் என்பவரும், சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கே சென்று, ‘ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்’ என வலியுறுத்தி கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் தொடங்கினர். அவர்கள் மீது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரே புகார் கொடுக்க, கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.
விடுதலையான சிவாஜி முத்துகுமாரிடம் பேசினோம். “காமராஜர் பெயரை பேருந்து நிலையத்துக்கு வைப்பதற்காக போராடும் நிலை ஏற்பட்டதே தமிழ்நாட்டுக்கு அவமானம். அதே பேருந்து நிலைய வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் கக்கன் சிலைகளை வைக்க வேண்டும்’’ என்றார்.
87 வயதான தியாகி சுடலைமுத்து நாடாரிடம் பேசியபோது, “நான் உண்ணாவிரதம் இருந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி’’ என்றார்.
இந்நிலையில் காமராஜர் பெயர் சூட்டப்-பட்டதை அடுத்து ராதாபுரம் பேருந்து நிலையத்-திலிருந்து முத்துவேலர் & அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றவேண்டும் என்று கோரிக்கை-கள் எழுந்துள்ளன.
தே.மு.தி.க.வின் மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் இதுபற்றி நம்மிடம், “வரும் தேர்தலில் இந்தப் பகுதியில் உள்ள நாடார் சமுதாய ஓட்டு வங்கியில் சேதாரம் வந்து விடக் கூடாது என்றுதான் காமராஜர் பெயரை சூட்டியிருக்கிறார் கலைஞர். அவருக்கு காமராஜர் மீது உண்மையிலேயே மதிப்பு இருந்தால் ஏன் இத்தனை கால தாமதம்? கலைஞரின் பெற்றோர் சிலைகளும் அங்கிருந்து
|
No comments:
Post a Comment