Wednesday, December 7, 2011

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, இந்தப் காமப்பாதிரியை மன்னியும்.


மறக்க முடியுமா என்று ஒரு தொடர் ஜகத் கஸ்பரால் நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்ததை அறிவீர்கள். அந்தத் தொடர் எழுதப்பட்டு வந்ததை சவுக்கு வாசகர்கள் அறிவீர்கள். அந்தத் தொடரைப் படித்தவர்களுக்கு, புலிகள் இயக்கமே, இந்த போலிப் பாதிரி கஸ்பரை நம்பித்தான் இருப்பது போலவும், இந்தக் கஸ்பர் சொன்ன பேச்சை பிரபாகரன் கேட்டிருந்தால், புலிகள் இயக்கம் வீழ்ந்திருக்காது என்பது போலவும் எழுதப் பட்டு வந்தது. 

இந்தத் தொடர் வெளிவந்த பல நக்கீரன் இதழ்களின் அட்டை படம், இந்த “மறக்க முடியுமா“ தான். இந்த கஸ்பரை இது போல ப்ரமோட் செய்ததில், கர்ம வீரர் காமராஜ் மற்றும் கஸ்பர் இருவருக்கும் மிகுந்த பலன் தரும் விஷயமாக இருந்ததால், ரொம்ப வசதியாகப் போனது.

யார் இந்த ஜகத் கஸ்பர் ?

இவர் ஒரு ரோமன் கத்தோலிக்கப் பாதிரி. இன்று தமிழ் மையம் என்ற ஒரு மடத்தை வைத்து நடத்தி இந்த மடத்தின் மூலம், மத்திய மாநில அரசுகளின் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், இந்தப் பன்னாடையின் பின் புலம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கஸ்பர் என்ற இந்தப் போலிப் பாதிரி, இறையியல், வரலாறு, தத்துவம், அரசியல் ஆகிய பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆனால், இந்தப பாடங்கள் எதிலும் சிறக்காமல், பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதுதான் கஸ்பரின் திறமை. 

1997 முதல், 2002 வரை பிலிப்பைன்ஸ் மணிலாவில் உள்ள வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றினார். வெரித்தாஸ் வானொலி என்பது, நம்ப ஊரில் ப்ரேயர் சேனல், ஏசு அழைக்கிறார் என்ற டுபாக்கூர் சேனல்கள் வருகிறதல்லவா ? 

இதன் ஒலி வடிவம் தான் ரேடியோ வெரித்தாஸ். இந்த வெரித்தாஸ் வானொலியின் மறுபக்கம் என்னவென்றால், இது அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவால் நடத்தப் படுவது என்ற தகவல். மணிலாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே கஸ்பருக்கு, புலிகள் இயக்கத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

கஸ்பரின் பாதிரி என்ற போர்வையும், சர்வதேச தொடர்புகளும், புலிகள் இயக்கத்திற்கு, இந்த ஆளை நாம் பயன்படுத்திக் கொண்டால் என்ன என்று எண்ணி, புலிகளின் நிதியைக் கையாளும் ஒரு பொறுப்பு கஸ்பர் தலையில் விழுகிறது.

2002ம் ஆண்டு வரை வெளிநாட்டிலேயே இருந்த கஸ்பர், இந்தியாவுக்குள் கால் பதித்தது இசை ஞானி இளையராஜா மூலமாகத் தான். இளையராஜாவின் திருவாசக சிம்பொனியை வெளியிடும் பொறுப்பை ஏற்று, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திருவாசகத்தை வெற்றிகரமாக வெளியிட்டார்.


இதை வெளியிடும் போது, ஏற்பட்ட சினிமா தொடர்புகள் மூலம், அரசியல் தொடர்புகளை வளர்த்தெடுக்கிறார் கஸ்பர்.

கருணாநிதி குடும்பத்தோடு தொடர்புகள் ஏற்பட்டதும் கஸ்பருக்கு சுக்கிர திசைதான்.
கஸ்பரின் சர்வதேசத் தொடர்புகளை கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கருப்புப் பணத்தை மூட்டையாகக் கட்டி வைத்திருப்பவர்கள் முடிவெடுத்தார்கள். 

அதற்கான வழி முறைகளை கஸ்பரே வகுத்துக் கொடுத்தார். அவர் மூளையில் உதித்த திட்டம் தான் “தமிழ் மையம்“. இந்தத் தமிழ் மையம் 2002 ஜுலையில் தொடங்கப் பட்டது. இந்த மையத்தின் நோக்கம், மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்று கூறினாலும், உண்மையான வேலை, கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது. 

இந்தத் தமிழ் மையத்தின் ட்ரஸ்டிக்கள் யார் தெரியுமா ? கனிமொழி. ஸ்ரீராம் சிட்ஸ் முதலாளியின் மனைவி, மாஃபா பாண்டியராஜனின் மனைவி, மற்றும் சதீஷ் டேவிட் என்பவர்கள். 

இந்தத் தமிழ் மையத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுகிறேன். Central Institute of Classical Tamil என்ற மத்திய அரசு நிதி உதவி பெறும் ஒரு நிறுவனம் இருக்கிறது. இதன் பணி, மொழியை மேம்படுத்தவது, மக்களுக்காக தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி வழங்குவது.

இந்த நிறுவனத்திடமிருந்து, திருக்குறளை இசையாக்குகிறேன் என்று ஒரு 8 கோடி ரூபாயை வாங்கினார் இந்தப் போலிப் பாதிரி. வாங்கி, திருக்குறளை இசையோடு கலந்த சிடியாக தயாரித்து, பேராசிரியர்.அன்பழகனை வைத்து வெளியிட வைத்து, ஒரு சிடியை 500 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருக்கிறார் இந்தப் பாதிரி.

இந்தச் செம்மொழி மாநாட்டில், ஆடல் பாடல் தொடர்பான அனைத்து வேலைகளும், கஸ்பரின் தம்பி, ப்ரைட் ஜெகத் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அத்தனை வேலைகளிலும், 25 முதல் 40 சதவிகிதம் வரை கஸ்பர் குடும்பம் ஆட்டையைப் போட்டிருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

செம்மொழி மாநாடு எப்போதாவது தானே நடக்கும். அதனால், ஆண்டுதோறும் சம்பாதிக்க கஸ்பர் கண்டு பிடித்த அற்புதமான வழி, மராத்தான் ஓட்டப் பந்தயம் நடத்துவது. இந்த ஓட்டப் பந்தயத்தை, தனக்கு இருக்கும் பணத்தாலும், பத்திரிக்கை செல்வாக்காலும், பிரபலப் படுத்தி பெரிய அளவில் ஸ்பான்சர்களைப் பிடித்து, ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையப் போடுவது, கஸ்பருக்கு கை வந்த கலை.

இதே போல, ஆண்டுதோறும் நடக்கும் சென்னை சங்கமத்தில், கனிமொழியோடு சேர்ந்து கொண்டு, விழா ஏற்பாடுகள் அத்தனையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமிங்கிலத்தையே முழுங்கி ஏப்பம் விடும், கனிமொழியே கடுப்பாகும் அளவுக்கு, 50 சதவிகிதத்துக்கு மேல் ஆட்டையப் போட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் ஆராய்ச்சிக்காக ஏறக்குறைய 300 கோடி ரூபாய்கள், Central Institute of Classical Tamil, International Institute of Tamil Studies, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு, மொழிப் பிரிவு, போன்ற நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கின்றன. நான் தமிழில் ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று இந்த நிறுவனங்களிடமிருந்து இந்த ஆண்டு மட்டும் கஸ்பர் இது வரை பெற்ற தொகை ரூபாய் 16 கோடி.

இந்த நிறுவனங்களிடமிருந்து, ப்ராஜேக்ட் செய்கிறேன் என்று, பணத்தை வாங்கி, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும், மற்ற கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறை மாணவர்களை அழைத்து, உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை காட்டி, அவர்களை வைத்து, கடுமையாக வேலை வாங்கிக் கொள்வதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் போலிப் பாதிரியோடு கூட்டணியில் இருப்பவர்கள், ஆ.ராசா, தங்கம் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார், அமைச்சர் பூங்கோதை. இவர்கள் கூட்டணி எப்படி வேலை செய்கிறது தெரியுமா ? இது தவிர, வழக்கமான “டர்ட்டி பாய்ஸ்“ இதில் உண்டு. “டர்ட்டி பாய்ஸ்“ குழுவிற்கு, கஸ்பர்தான் பொருளாளர்.

செட்டிநாட்டு சீமானின் மகன், கார்த்தி சிதம்பரம் இவரின் நெருங்கிய கூட்டாளி. எப்படி நெருங்கிய கூட்டாளி என்றால், மாலை வேளைகளில் கஸ்பரோடு அமர்ந்து Green Label ஸ்காட்ச் குடிக்கும் அளவுக்கு நெருங்கிய கூட்டாளி.

பாதிரி நடத்திய கிரிஸ்துமஸ் விழாவில் பேசும் ஆ.ராசா


அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, மென்பொருள் ஆர்டர் வழங்குவது. இந்த மென் பொருள் ஆர்டர்கள், கஸ்பரோடு யார் ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கே வழங்கப் படும். அதாவது, உங்களிடம் ஒரு மென்பொருள் இருக்கிறது என்றால், நீங்கள் கஸ்பரை சந்திக்க வேண்டும். 

அந்த மென்பொருளின் விலை 2000 ரூபாய் என்றால், கஸ்பர், உங்களிடம் 2000 ரூபாய் உங்களுக்கு வழங்கப் படும் என்று கூறுவார். இந்த மென்பொருளை தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும், 5000 ரூபாய்க்கு கஸ்பர் வழங்குவார். கஸ்பருக்கு 3000. உங்களுக்கு 2000. 


இது போல, ஆயிரக்கணக்கான மென்பொருள் உங்களிடம் வாங்கப் படும் என்பதால், கிடைத்த வரை லாபம் என்று நீங்களும் சந்தோஷப் படுவீர்கள். இந்த 3000த்தை கஸ்பர் முக்கியஸ்த்தர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்தது போக, ஒரு பெரும் பாகத்தை அமுக்குவார்.
கருப்பை வெள்ளையாக்க, தமிழ் மையத்தைத் தவிர, Give Life. நாம் என மொத்தம் எட்டு ட்ரஸ்ட்டுகள் வைத்துள்ளார் கஸ்பர். 

இந்த ட்ரஸ்ட்டுகள் மூலம், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களிடமிருந்தும், பணம் வசூல் செய்வது, கஸ்பரின் திறமை.
இது தவிர, Acrolinks Business Solutions Pvt. Ltd. என்ற மென்பாருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்தப் பாதிரி. இந்த நிறுவனம் சென்னையில் உள்ளது.

திருடர்களின் கூட்டணி

இந்த நிறுவனம் போக, மும்பையில் மற்றொரு நிறுவனம் இருப்பதாகவும், தகவல்கள் கூறுகின்றன. மாதத்திற்கு இரு முறை, மும்பை செல்லும் கஸ்பரோடு, இவரது செயலாளரும், மேரி என்ற கன்னியாஸ்திரியும் செல்வார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
சென்னையில் இருக்கும் நாட்களில் கஸ்பரின் முழுநேர வேலை, ப்ரோக்கர் தொழில். ப்ரோக்கர் என்றால் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். 

அரசு காண்ட்ராக்ட் பெற வேண்டும், அரசு வேலை பெற வேண்டும், நல்ல போஸ்டிங் வேண்டும் என்று பல்வேறு வேலைகளுக்காக, மயிலாப்பூரில் உள்ள தமிழ் மைய அலுவலகத்திற்கு, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, தொடர்ச்சியாக பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

எளிமையாக வாழ்க்கை நடத்த வேண்டிய இந்த கத்தோலிக்கப் பாதிரியிடம் இன்று எத்தனை வண்டிகள் தெரியுமா ?

1) ஹ்யுண்டாய் ஆக்சென்ட்
2) டொயோட்டா கரோல்லா
3) பியட் பாலியோ
4) டோயோட்டா இன்னோவா
5) போர்ட்

ஈழப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில், இந்தப் பாதிரி என்ன செய்தார் தெரியுமா ? நக்கீரனில் புருடா விடுவதைத் தவிர்த்து, ஒரு கூட்டமைப்பை அமைப்பார். முக்கியமான நபர்களை அழைத்து, அவர்களிடம் நாம் ஒரு கூட்டமைப்பை அமைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறுவார்.
அந்தக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் மட்டும் 

நடக்கும். கூட்டமைப்புக்கு வருகை தரும் ஒருவர் கூட, இரு சக்கர வாகனத்திலோ, நடந்தோ வர மாட்டார்கள். அத்தனை பேரும், சொகுசு காரில் வருவார்கள். சொகுசு காரில் வருபவன், ஈழத் தமிழருக்காக தெருவில் இறங்குவானா ?

இப்படியே, பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்று தன் வண்டியை ஒட்டி, பல கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார் கஸ்பர்.

பாதிரியாக இருந்தாலும், கஸ்பர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போலத்தான் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால், இத்தனை பாவங்களை தொடர்ந்து செய்வாரா கஸ்பர் ?

சவுக்குக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இருந்தால், பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே, இந்தப் போலிப் பாதிரி கஸ்பரை மன்னியும் என்றுதானே பிரார்த்திக்க வேண்டும் ?.

No comments:

Post a Comment