Wednesday, December 7, 2011

நட்ட நடு வீதியில் குத்திக் கொலை!!!


Argenteuil (Val d'Oise) இலுள்ள MONOPRIX அங்காடியின் முன்னால் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் செவ்வாய் (DEC06) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதியம் 13h15 அளவில் ஒரு வாய்த்தகராறு அருகிலிருந்த வாகனத் தரிப்பிடத்தில் நடந்தது. வாய்த் தகராற்றின் காரணம் அறியப்படவில்லை. தகராறு MONOPRIX அங்காடி வாசல் வரை தொடர்ந்தது.


திடீரென தகராற்றில் ஈடுபட்ட ஒருவர் 20 வயதுடைய மற்றவைரைக் கத்தியால் பல தடவை குத்தி இழுந்து வந்து நடு வீதியில் எறிந்துள்ளான். எறிந்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். அங்கு உடனடியாக அழைக்கப்பட்ட முதலுதவிப் படையினர் அங்கு வந்த போது கத்திக் குத்துகளுக்கு உள்ளானவர் இறந்து போய் விட்டார். மேலதிக விசாரணைகளும் சாட்சியங்களின் வாக்கு மூலங்களும் பெறப்படுகின்றன. 

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும். 

No comments:

Post a Comment