லஞ்சம் கேட்ட உத்தியோகத்தர்களுக்கு பாம்புகளை விட்டு நல்ல பாடம் கற்பித்துக் கொடுத்து உள்ளார் இந்திய குடிமகன் ஒருவர்.
வட இந்தியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் ரக்ஸ் அலுவலகத்துக்கு அலுவலாக சென்று இருக்கின்றார். அக் காரியத்தை முடித்துக் கொடுக்கின்றமைக்கு இலஞ்சம் தரும்படி கோரியுள்ளார் உத்தியோகத்தினர். இதனால் கோபமடைந்த பாம்பாட்டி தன்னிடம் இருந்த பாம்புகளை அவிழ்ந்துவிட்டு அலுவலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
எஐமானனின் கட்டளைப்படி தாக்குதலை ஆரம்பிக்க பாம்புகள் அலுவலகத்தின் தரை மீது படை எடுத்து நின்றன.
அதிர்ச்சியில் உறைந்து போன உத்தியோகத்தர்கள் மேசை மீது ஏறி நின்று தங்களை காப்பற்றிக் கொண்டனர். பின்னர் பொலிஸாரும், ரக்ஸ் அலுவலக சிற்றூழியர்களும் சேர்ந்து பாம்புகளை ஒருவாறு பிடித்து பையில் அடைந்தனர்.
இதன்போது எவரும் பாதிப்படையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment