யாகம் வளர்க்கும் அக்னியில் நெய் ஊற்றினால் வளரும், நீர் ஊற்றினால் அணையும். ரவிக்குமார் ராசிக்கு இரண்டாவது நடந்துவருகிறது.
ரஜினி ஆஸ்பத்திரிக்கு போன கையோடு ‘ராணா’ வேலைகள் மூட்டை கட்டப்பட்டன. எனினும் அடுத்த வாரம் ஷூட்டிங், அடுத்த மாசம் ஷூட்டிங் என ஆளாளுக்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனர். இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் ‘கோச்சடையான்’ என அறிவிப்பு வர, ராணா அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள்.
ரசிகர்களின் கணிப்பு கிட்டத்தட்ட உண்மையாகும் வாய்ப்பு உள்ளது என்கிறது ரஜினி வட்டாரம். கோச்சடையானை முடித்த கையோடு ஷங்கருடன் மீண்டும் இணைகிறாராம் ரஜினி. சமீபத்தில் ஷங்கரை அழைத்து கதையை கேட்ட கையோடு கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டார் ரஜினி என்கிறார்கள். கோச்சடையான் 70 சதவீதம் அனிமேஷன் படமாக உருவாகிறது. இதற்காக இரண்டு வாரங்கள் மட்டும் ரஜினி நடிக்கப்போகிறாராம். அதன் பிறகு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
எனவே இப்போதைக்கு ராணா தொடங்குவதாக இல்லை. செண்டிமெண்டாக ராணா துவக்கம் சரியாக அமையாததால் அதை கைவிடும் யோசனையும் ரஜினியிடம் இருக்கலாம் என்கிறார்கள்.
|
No comments:
Post a Comment