Facebook தனது பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களில் பெருமளவானவற்றை வெளியே விளம்பரப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய அமைப்பினால் Facebook தனது பயனாளர்களின் அரசியல், பாலியல் மற்றும் சமய நம்பிக்கைகள் பற்றிய தகவல்களை வெளியிடும் முறையை நிறுத்தப் போவதாகக் கூறியுள்ளது.
நவீன மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் மக்களின் செயற்பாடுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை விளம்பரதாரர்களுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தனிப்பட்ட கருத்துக்கள் மீறப்படுவது தொடர்பாக ஜனவரியில் EC Directive என்ற புதியதொரு அமைப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ் அமைப்பானது பயனாளர்களால் அனுமதிக்கப்படும் தகவலைத் தவிர வேறொந்தத் தகவல்களையும் விளம்பரப்படுத்துவதைத் தடைசெய்யும் எனக் கூறப்படுகின்றது.
இங்கு பெறப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிலுள்ள கணினிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் Facebook இனால் இதன் சட்டங்கள் மீறப்பட்டால் அதன்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பாரியளவில் தண்டப்பணம் அறவிடப்படுமென்று கூறப்படுகின்றது.
இந்த நகர்வானது அடுத்த வருடம் Wall Street இன் பணமாற்றுத் திட்டத்தில் பங்குபற்ற நினைத்த Facebook இன் திட்டங்களைப் பாதிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த அமைப்பானது தற்போதைய தொழினுட்ப முன்னேற்றங்களுடனான ஐரோப்பிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைத் திருத்தும் என்றும் ஐரோப்பாவெங்கும் இது நடைமுறையிலுள்ளது என்பதை உறுதிப்படுத்துமென்றும் கூறப்படுகின்றது.
இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள கொள்வனவாளர்கள் தமது தரவுகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்கவேண்டும்.
ஒரு நிறுவனத்தினால் ஆராயப்பட்டு களஞ்சியப்படுத்தப்படும் பயனாளர்களின் தரவுகள் மட்டும் ஆராயப்படுவதில்லை.
அவர்களது பக்கங்களில் அவர்கள் தெரிவுசெய்யும் like மற்றும் dislike விபரங்களும் ஆராயப்படுகின்றதாகக் கூறப்படுகின்றது.
இதில் ஒருவரின் நண்பர்கள், குடும்பங்கள் மற்றும் கல்விசார் பின்னணிகள் பற்றிய தகவல்களும் இந்நிறுவனத்தினால் சேகரிக்கப்படுவதோடு அவர்களது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களையும் கண்டுபிடிக்கின்றது.
இவற்றையெல்லாம் பெற்று ஒரு பெண் ஒரு மணப்பெண்ணாக வரக்கூடிய நிலையுள்ளதைக் கண்டுபிடித்து அவர்பற்றி விளம்பரங்களைத் திருமணப் படப்பிடிப்பாளர்களுக்குத் தெரிவிக்க விளம்பரம் செய்கின்றது.
இதுபோன்று இசையினைக் கேட்பவர்களின் பெறுமதியான விடயங்களையும் பெற்று விளம்பரதாரர்களுக்குக் கொடுக்கின்றது. இவ்வாறு நண்பர்களிடம் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் விபரங்களையும் அந்நிறுவனம் வர்த்தக நோக்கங்களிற்காகப் பயன்படுத்தலாம்.
எனினும் இந்த நிறுவனம் தான் தகவல்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தவில்லையென்று கூறிவருகின்றது.
மக்ஸ் ஸ்கிறீம்ஸ் என்ற ஓஸ்ரியாவைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தன்னைப் பற்றி என்ன விபரங்களை அது வைத்துள்ளதெனக் கேட்டிருந்தான். அதற்கு அந்நிறுவனம் 1,222 பக்கங்கள் கொண்ட ஓர் இறுவட்டினை அனுப்பிவைத்திருந்தது.
எனினும் அனுப்பிவைத்த விபரங்களில் முழு விபரங்களும் இல்லையென அம்மாணவன் தரவுக் கண்காணிப்பு நிறுவனங்களிடம் முறையிட்டிருந்தான்.
அடுத்த வாரம், Facebook நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அயர்லாந்தில் வைத்து அந்நிறுவனத்தின் கணக்கெடுப்புகள் பற்றி தரவுப் பாதுகாப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படுமென்றும் கூறப்படுகின்றது.
அனைத்து 800 மில்லியன் Facebook பயனாளர்களும் அவர்கள் அறிந்தோ அறியாமலே தமது தரவுத் தகவல்களை அந்நிறுவனம் பயன்படுத்த சம்மதித்துவிடுகின்றார்கள்.
ஏனெனில், இவர்கள் Sign up செய்யும்போது 4000 சொற்களடங்கிய ஒப்பந்தமொன்றை ஏற்றுக்கொண்டுதான் நுழைகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தினைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு பக்கத்தின கீழுள்ள சிறிய எழுத்துக்கெண்ட link இனை சொடுக்கிப் பார்க்கலாம்.
Facebook பாரியளவில் மைக்ரோசொப்ற்றுடன் ஒரு விளம்பர ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால் 2009 இல்தான் அதன் படிப்படியான விளம்பர வளர்ச்சி ஏற்பட்டது.
இந்த வளர்ச்சிதான் Facebook இனை ஒரு பங்குச்சந்தைக்குள் நுழையத் தயாராக்கியதெனலாம்.
பிரித்தானியாவில் படிப்படியான அறிமுக விளம்பரங்களினால் 25மில்லியன் பவுண்கள் கடந்த இரண்டு வருடங்களில் பெறப்படுகின்றதெனக் கூறப்படுகின்றது.
எனினும் பயனளார்கள் எதிர்பார்க்கும் முறையில்தான் எந்தவொரு தரவுகளும் சேகரிக்கப்படவேண்டுமென பிரித்தானியத் தரவு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட தரவானது மூன்றாவது நபரிடம் கொடுக்கப்பட்டால் அல்லது விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டால் இதுபற்றி அப்பயனாளருக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்றும் கூறப்படுகின்றது.
|
No comments:
Post a Comment