Sunday, December 4, 2011

மனைவி வேறு நபருடன் ஓட்டம்: போதையில் மகளை கெடுத்த காமக்கொடூர தந்தை!!


திண்டுக்கல் அருகே ராமையன்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார்(38). பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்விசந்தோஷம். இவர்களுக்கு மணிமேகலை (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது இரு குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்விசந்தோஷம் வேறு ஒரு நபருடன் ஓடிவிட்டார்.

சசிக்குமாரின் மகன் புகையிலைபட்டியில் உள்ள தனது பாட்டி சுசிசகுந்தலா வீட்டில் தங்கி 4ம் வகுப்பு படித்து வருகிறார். மணிமேகலை தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

விடுமுறை நாட்களில் தனது தந்தை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு இறுதி தேர்வு விடுமுறைக்கு கடந்த மே மாதம் தனது தந்தை வீட்டிற்கு மணிமேகலை வந்திருந்தார்.

அப்போது குடிபோதை வெறியில் இருந்த சசிக்குமார் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். தன்னையும், தனது தம்பியையும் கொலை செய்துவிடுவாரோ என்ற பயத்தில் மணிமேகலையும் எதுவும் கூறவில்லை.
பள்ளி திறந்தவுடன் தூத்துக்குடி சென்று விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறைக்காக மணிமேகலை தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.

அவரது வயிறு பெரிதாக இருக்கவே, சந்தேகம் அடைந்த சுசிசகுந்தலா, மணிமேகலையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து பார்த்தார். அதில், அவர் 5 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

அவரிடம் விசாரித்த போது, பெற்ற தந்தையே தன்னை பலாத்காரம் செய்தது குறித்து கண்ணீர் மல்க கூறினார். அதிர்ச்சியடைந்த சுசிசகுந்தலா இதுகுறித்து திண்டுக்கல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமக்கொடூர தந்தை சசிக்குமாரை நேற்று கைது செய்தனர்.

No comments:

Post a Comment