மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள லெஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டி என்ற பூரி(30). அவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பூரிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான கமலுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பூரியும், கமலும் கடந்த 3ம் தேதி ஊரைவிட்டு ஓடினர். இந்த தகவல் அறிந்த பூரியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்களை பல்வேறு இடங்களில் தேடி இறுதியாக கடந்த 20ம் தேதி கண்டுபிடித்தனர்.
பூரியை ஊருக்கு அழைத்து வந்து கிராம மக்கள் முன்னிலையில் அடித்துக் கொன்றனர். பின்னர் அவரது உடலை மரத்தில் தொங்கவிட்டு, தீ வைத்து எரித்தனர். இதைப் பார்த்த கிராம மக்கள் யாரும் பூரியை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து பூரியின் பெற்றோர் டிம்னி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பூரியின் மாமனார், மாமியார் மற்றும் கமல், அவரது குடும்பத்தார் தலைமறைவாகியுள்ளனர்.
|
No comments:
Post a Comment