ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சரண் (23). இவரும், பிடெக் பட்டதாரி ஸ்ரீனிவாசலு (28), அசோக், சந்திரகாந்த், வெங்கடேச பிரசாத் ஆகியோர் பெங்களூரில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
வெங்கடேச பிரசாத் தவிர மற்ற அனைவரும் வேலை தேடி வந்தனர். நேற்று வெங்கடேச பிரசாத் வேலைக்கு சென்று விட்டார். சந்திரகாந்த் வீட்டின் வெளியில் நின்றிருந்தார். மற்ற மூவரும் வீட்டுக்குள் இருந்தனர்.
ஸ்ரீனிவாசலுக்கு சளி தொல்லை இருந்தது. இதனால் தொடர்ந்து தும்மிக் கொண்டே இருந்தார். அதை பார்த்த சரண் கேலி செய்து சிரித்தார்.
கோபம் அடைந்த ஸ்ரீனிவாசலு சரணை அங்கிருந்து செல்லும்படி கூறினார். அதை கண்டு கொள்ளாமல் சரண் கிண்டலடித்து கொண்டு இருந்தார்.
ஆத்திரம் தலைக்கேறிய ஸ்ரீனிவாசலு, வீட்டு கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து வந்து சரணை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரண் துடிதுடித்தார். இதை நேரில் பார்த்த அசோக் கூச்சல் போட்டார். வெளியில் நின்றிருந்த சந்திரகாந்தும், அசோக்கும், சரணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து விசாரித்த போலீசார், ஸ்ரீனிவாசலுவை கைது செய்தனர்.
|
No comments:
Post a Comment