Sunday, December 4, 2011

நாக்கை அறுத்து மார்பை பிளந்து ரவுடி கொலை!! (பட இணைப்பு)


சேலத்தில் ரவுடியின் நாக்கை அறுத்து, மார்பை பிளந்து கல்லைக் கட்டி கிணற்றில் சடலத்தை மர்ம நபர்கள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அன்னதானப் பட்டி ஒன்பதாம்பாலியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (36). பெயின்டர். அதே பகுதியில் சில்லி சிக்கன் கடையும் நடத்தி வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் மனைவி பிரேமாவுடன் கடையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய வெங்கடே சனை 5 பேர் கும்பல் ஒட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது.

இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவரை அந்த கும்பல் கொன்று வீசியதாக கிடைத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் கிணற்றில் தேடினர்.
இந்நிலையில் அன்னதானப்பட்டி பழனிச்சாமி(40) என்பவரை காணவில்லை எனவும், இவர் ரவுடி கோழி பாஸ்கரின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.
80 அடி ஆழ கிணற்றில் மூழ்கியிருந்த சடலத்தை 2 மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டு நேற்று பகல் 1.30 மணியளவில் மிதந்த சடலத்தை மீட்டனர்.

நாக்கை அறுத்து, மார்பை பிளந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்த அது பழனிச்சாமி என தெரியவந்தது. கொலையாளிகள், கல்லை கட்டி சடலத்தை கிணற்றில் வீசியிருந்தனர். அது ரவுடி பழனிச்சாமி தான் என்பதை உறவினர்கள், மனைவி உறுதி செய்தனர். சடலத்தை பார்த்த மனைவி கதறி அழுதார்.

பழனிச்சாமியை கொலையாளிகள் கொலை செய்து, நாக்கை அறுத்துள்ளனர். பின்னர் மார்பை பிளந்து, சடலம் மேலே வராமல் இருப்பதற்காக கல்லைகட்டி கிணற்றில் வீசியுள்ளனர். கொலையான பழனிச்சாமி மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. இவருக்கு பூங்கொடி என்ற மனைவி யும், 2 மகன்களும் உள்ளனர்.

சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை பிடிக்க கமிஷனர் மஹாலி, துணை கமிஷனர் சத்தியாபிரியா மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் பெருமாள் கோஷ்டியை சேர்ந்த 12 பேர் போலீசாரின் பிடியில் சிக்கியுள்ளனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலைக்கு பின்னணி

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் கோழிபாஸ்கர் தலைமையில் ஒரு ரவுடி கோஷ்டியும், பெருமாள் தலைமையில் ஒரு ரவுடி கோஷ்டியும் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிபாஸ்கர் மற்றும் அவரது கோஷ்டியினர் பெருமாளை வெட்டிக் கொல்ல முயன்றனர்.

அப்போது தடுத்ததில் பெருமாளின் கையில் இருந்த 9 விரல்கள் துண்டானது. இந்த சம்பவத்திற்கு பழி தீர்க்க பெருமாள் கோஷ்டி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் கோழி பாஸ்கர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரது அண்ணன் வெங்கடேசனை வெட்டிக் கொன்றுள்ளனர். பழனிச்சாமி ஏற்கனவே பெருமாள் கோஷ்டியில் இருந்துள்ளார்.

சமீபத்தில் தான் அவர் கோழி பாஸ்கர் கோஷ்டியில் சேர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் கோஷ்டி பழனிச்சாமியை கொடூரமாக கொன்று கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment