Sunday, December 4, 2011

வீடு புகுந்து இளம் பெண் பலாத்காரம்: ஐடிஐ மாணவர் கைது!!


வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்த ஐடிஐ மாணவர் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் உமா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(19). பணகுடியில் உள்ள தனியார் ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உமா வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டுக்குள் புகுந்த சதீஷ்குமார், உமாவை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.இதுபற்றி உமாவின் பெற்றோர் திட்டச்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment