கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகர், 9வது தெருவை சேர்ந்தவர் கட்டை குமார் (48). நில புரோக்கர். இவர், கடந்த 13ம் தேதி வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாடு அருகே முட்புதரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கல்லால் அடித்து தலை சிதைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், வியாசர்பாடி ஜெ.ஜெ.நகர் 6வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சத்யா என்பவரின் மனைவி சங்கீதாவுடன் (29) கட்டை குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து திண்டிவனத்தில் பதுங்கியிருந்த சத்தியா (எ) சத்திய நாராயணன் (37), அவரது கூட்டாளிகள் சாந்தா (எ) சாந்தகுமார் (22), மதன் (22), தன்ராஜ் (22) ஆகிய 4 பேரை தனிப்படை சப் இன்ஸ்பெக்டர்கள் தேவராசு, மகேந்திரன், கலை ஆகியோர் கைது செய்தனர்.
விசாரணையில், சத்திய நாராயணன் கூறியதாவது: நானும் நில புரோக்கர் கட்டை குமாரும் நெருங்கிய நண்பர்கள். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். மனைவி சங்கீதாவுடன் நட்புடன் பழகினார்.
எனக்கு ஆட்டோ வாங்கி தந்தார். நான் சவாரிக்க வெளியே செல்லும் நேரத்தில் அவர் வீட்டுக்கு வந்து சங்கீதாவுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை அக்கம்பக்கத்தினரும் நண்பர்களும் என்னிடம் கூறினர்.
இருவரையும் கண்காணித்து கையும் களவுமாக பிடித்து கண்டித்தேன். எனினும் அவர்களது கள்ளஉறவு நீடித்தது.
சம்பவத்தன்று ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு பக்கம் அழைத்து சென்றேன். அங்குவைத்து, சங்கீதாவுடனான கள்ள உறவை விட்டு விடுமாறு புத்திமதி கூறினேன். ஆனால் அவர், உன் மனைவியுடன் உல்லாசமாக இருப்பதற்குத்தான் உனக்கு ஆட்டோ வாங்கி தந்தேன்.
அவளை என்னால் பிரிய முடியாது என்றார். இதனால் நண்பர்களுடன் சேர்ந்து அவரை கல்லால் அடித்து மண்டையை உடைத்துவிட்டு ஓடி விட்டேன். இவ்வாறு சத்திய நாராயணன் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
|
No comments:
Post a Comment