கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த உதயகலா என்னும் பெண்ணும் மற்றும் லண்டனில் சர்வதேச தமிழ் மாணவர் ஒன்றியம் (ITSO) நடத்தி வந்த ரிஷியுமாகச் சேர்ந்து பெருந்தொகையான மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதற்காக பலரிடம் பணம் திரட்டப்பட்டுள்ளதோடு ஊரில் உள்ள பல போராளிகளின் குடும்பங்களிடமும் பணம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாகச் சொல்லப்போனால் ஊரில் உள்ள ஏரியா வசூலை உதயகலா கவனிக்க... லண்டன் ஏரியா வசூலை ITSO தலைவர் ரிஷி கவனித்துள்ளார். கிளிநொச்சியில் கஷ்டப்பட்ட மாணவிகளை சில முஸ்லீம்கள் மிரட்டி அவர்களை நீலப்படங்களில் (செக்ஸ் படங்களில்) நடிக்க வைப்பதாகக் கூறி ரிஷி என்பவர் பலரிடம் லண்டனில் பணம் கறந்துள்ளார்.
இவர் காட்டிய 70 MM பயாஸ்கோப் படக் கதையைக் கேட்டு சிலர் கண்ணீர் வடித்து ஏமாந்துள்ளனர். இவர் ஊரில் கூட்டுச் சேர்ந்த ஆளின் பெயர் தான் உதயகலா. அடுத்த ஒண்ணாம் நம்பர் பிராடு ! முஸ்லீம் சகோதரர்களையும் தமிழர்களையும் அடிபடவிடவேண்டும். அதே சமயம் காசும் கறக்கவேண்டும். சிங்களப் புலனாய்வுப் பிரிவால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நபரே இந்த ரிஷி எனச் சிலர் கூறிவந்தபோது அதனை எவரும் நம்பத் தயார் இல்லை.
ஆனால் இன்று நிலை எல்லை மீறிச் சென்றுள்ளபோது வயிற்றில் அடித்து அழுவதால் என்ன பயன்? உதயகலா வட்டக்கச்சியில் இருந்தவேளை போராளி ஒருவரை மணம் முடித்துள்ளார். பின்னர் அப்போராளி காயப்பட்டதால் அவர் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனிடையே வன்னி தொழில்நுட்பக் கல்லூரியில் கணனிக் கல்வி பயிலச் சென்ற உதயகலாவுக்கும் அங்கே ஆசிரியராக இருந்த தயாபராஜ் (தயாபரன்) க்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது.
வன்னத் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை பார்த்த தயாபரன் என்பவரை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது என்ற செய்தி 2009ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் வெளியாகியது. இவை அனைத்துமே ஒரு செட்டப்தான். ஆனால் உதயகலாவும் தயாபரனும் இந்தியா சென்று அங்கே வாழ்ந்து வந்துள்ளனர். கிளிநொச்சியில் இவர்கள் இருந்த காலகட்டத்தில் தயாபரன் என்பவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் நெருக்கமாக இருந்ததைப் பயன்படுத்தி பல ஏமாற்றுச் சம்பவங்கள் நடந்துள்ளது.
ஊனமுற்ற போராளிகளை வெளிநாடு அனுப்புவதாகப் பணம் பறிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற சில போராளிகளை தாம் வெளியே எடுத்துவிடுவதாகக் கூறி உதயகலாவும் தயாபரனும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர். தமது பிள்ளைகள் வெளியே வருவார்கள் என நம்பி பல குடும்பத்தினர் தமது வீடுவாசல்களை விற்று சிலர் தமது நகை நட்டுகளை விற்று இன்னும் சிலர் தமது சொந்த சேமிப்புகளைக் கூட இவர்களிடம் கொடுத்து ஏமாந்து செய்வதறியாது தவிக்கின்றனர்.
ஊரில் உதயகலாவும் தயாபரனும் லண்டனில் சர்வதேச மாணவர் ஒன்றியம் (ITSO) என்ற போர்வையில் ரிஷியும் சேர்ந்து கூட்டாகக் கொள்ளையடித்துள்ளனர். லண்டனில் கொள்ளையடிப்பது எனக்கு ஆனால் ஊரில் இருந்து படங்களை அனுப்பவேண்டும் என ரிஷி கூறியுள்ளார். அதாவது குழந்தைகளுக்கும் மாணவ மாணவியருக்கும் ஊரில் உதவுவது போல பல போலியான படங்களை எடுத்து அதனை லண்டனில் காட்டியுள்ளார் ரிஷி.
2009ம் ஆண்டு போர் நிறைவுற்ற பின்னர் லண்டனுக்கு மாணவர் விசாவில் வந்த ரிஷி என்னும் நபர் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்றை லண்டனில் திறந்துள்ளார். அவர் அதனை எவ்வாறு திறக்க முடியும்? மாணவர் விசாவில் வரும் எவரும் 20 மணித்தியாலங்களுக்கு மேல் வேலைசெய்யவும் முடியாது மற்றும் வணிகத்திலும் ஈடுபட முடியாது என்பது பிரித்தானிய குடிவரவுச் சட்டமாகும்.
இதனைக் கூடக் கவனிக்காமல் பலர் அவருக்கு உதவி செய்துள்ளனர். காரணம் அவர் தேன் ஒழுகும் பேச்சே இதற்குக் காரணமாக அமைந்தது. லண்டன் வந்து சில மாதங்களில் அவர் இங்குள்ள பல அமைப்புகளுடன் சர்வசாதாரணமாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். THO என்று அழைக்கப்படும் தமிழர் சுகாதார அமைப்பு, பின்னர் ரி.ஆர்.ஓ, அதன் பின்னர் நம்பிக்கை ஒளி என பல தர்மஸ்தாபனங்களுடனும் அதன் தலைவர்களுடனும் அவர் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். இதனூடாக அவர் பணத்தைப் பெற்று ஊருக்கு அனுப்புவதாக நாடகமாடியும் உள்ளார்.
தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதயகலாவைப் பொறுத்தவரை அவர் ஊரில் தொடர்ந்தும் பல ஏமாற்று வேலைகளை செய்து வருகிறார். ஊனமுற்ற போராளிகளை, குழந்தைகள் பராமரிப்பு, மாணவிகளை பராமரிப்பரிப்பது எனப் பல விடையங்களை மக்களுக்குச் சொல்லி அதனூடாக அவர் பணத்தைக் கறந்து வருகிறார். எம் உறவுகளே! இவர்களை நீங்கள் இனங்காணுவது அவசியமாகும்.
எத்தனையோ நல்ல தர்மஸ்தாபனங்கள் இருக்கும்போது இவர்களிடம் போய் ஏன் பணத்தைக் கொடுக்கவேண்டும்? லண்டனில் இருந்து இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் இவர்கள் போன்றவர்களுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கவேண்டும்? அதுமட்டுமா தனி மனிதர்களும் செல்வந்தர்கள் மற்றும் மருத்துவர்களும் இந்த ரிஷியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போயுள்ளதாகப் புலம்புகின்றனர்.
இவ்வாறு பெருந்தொகையான பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காவும் மக்களை ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காகவும் உதயகலாவையும் தயாபரனையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது மலேசியாவில் தங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இவர்களுக்கு சர்வதேசப் பொலிசார்(இன்ரர் போல்) பிடியானண பிறப்பிக்க இலங்கையில் உள்ள யாராவது ஒரு சட்டத்தரணி முன்வருவாரா? இல்லை தமிழர்களின் நலன்களுக்காக தாம் செயல்படுகிறோம் எனக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விடையத்தில் தலையிட்டு தமது தரப்பினூடாக ஒரு சட்டத்தரணியை நியமிக்குமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளின் குடும்பங்களுக்குமே மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதேநேரம் புலம்பெயர் மக்களிடம் உதயகலா என்பவர் தனது கள்ளக் காதலனான தயாபராஜ் இறந்து விட்டார் எனப் பணம் வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இறந்தமைக்கான ஆதரம் கேட்கப்பட்டுள்ளது. அதற்காக தனது கள்ளக் காதலனை இறந்த்துபோல் நடித்து அதனைப் புகைப்படம் எடுத்து புலம்பெயர் வாழ் மக்களுக்கு ஆதரமாகக் காட்டியுள்ளார். இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உதயகலா என்வரின் மற்றுமொரு நாடகமாக தனது சகோதரியின் பிள்ளை யுத்த்த்தினால் பாதிக்கப்பட்டு அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து அதன் ஊடாகவும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளார் உதயகலா. இதற்கான ஆதாரமாக அச் சிறுபிள்ளையை வெள்ளைத் துணியால் சுற்றிப் படம் எடுத்தும் காண்பித்துள்ளார்.
இதேவேளை ரிஷி என்பவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் வேறொருவரால் நடத்தப்பட்ட அநாதையில்லப் புகைப்படங்களைக் கொண்டு பணம் பெற்றுக் கொண்டதாகவும், இருந்தும் அப் பணத்தினைக் கொண்டு தான் ஒரு இணையத்தளத்தினை உருவாக்கியுள்ளதாகவும் கொள்ளையடித்த பணத்துக்குக் கணக்குக் காட்டியுள்ளார். வன்னிப் பெருநிலப்பரப்பில் எத்தனையோ தமிழ் மக்கள் ஒருவேளை உணவுக்காக்க் கையேந்திக் கொண்டிருக்கும் நிலையில் புலம்பெயர் வாழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் இணையத்தளம் செய்த்தாக்க் கூறுகின்றார் இவர்.
இது இவ்வாறிருக்க வணக்கம் என்ற இணையத்தளத்தைக் கொண்டும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெகுவிரைவில் இவ்விடத்தில் பிரசுரிக்கப்படும். அதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஏழை பிள்ளைகளுக்கு உதவுவதற்காக அனுப்பி வைத்த பணம் இதுவரை அப் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரவில்லை எனக் கேட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து தமக்காகச் செயற்பட்ட கஸ்தூரி என்பவர் 7 இலட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாகவும் இதனாலேயே தங்களால் அனுப்பி வைத்த பணம் இன்னும் அப் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரவில்லை எனத் தெரிவித்தார்.
இவரின் தகவலையடுத்து கஸ்தூரியுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் சார்பாக ஸ்கந்தா என்பர் தெரிவிக்கையில், அனைத்துப் பித்தலாட்டங்களுக்கும் ரிஷிதான் காரணம் என அவர் தெரிவித்துள்ளதுடன் அந்தப் பெண் எவ்வித பணத்தையும் கையாடவில்லை எனவும் அவர் பற்றுணர்வுடன்தான் இதனை நடத்தி வந்தாகவும், இவரின் செயற்பாடுகள் பிழையான வழியில் செல்வதையறிந்து கஸ்தூரி அதிலிருந்து விலகிக் கொண்டதாகவும் ஸ்கந்தா தெரிவித்தார்.
இதேவேளை இவர்களால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரிடம் கேட்டபோது, இவர்களை நம்பி இனி ஒரு ரூபாய் கூட வழங்க வேண்டாம் என புலம்பெயர் வாழ் மக்களிடம் தான் தாழ்மையாக்க் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
|
No comments:
Post a Comment