இயக்குனர் பாலாவை பற்றி சில தகவல் துளிகள்!
* பாலாவின் படத்தில் 'சன்ரைஸ் ஷாட்'டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது. ஆனால், சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும்!
* பாலாவின் திருமண ஏற்பாடுகளின்போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்ட, விளையாட்டாக 'பிதா மகன்' வில்லன் ரோலுக்கு 'மகாதேவன்' என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு!
* அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷூட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும்!
* தியேட்டரில் படம் பார்க்கும்போது செல் போனில் பேசினாலோ, எஸ்.எம்.எஸ். ஒலிஎழும்பினாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார்!
* எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணிகள்தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார்!
|
No comments:
Post a Comment