இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கான தலைப்புகளில் தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
தமிழில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படத்திற்கு பெருமான் தி ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டப்பட்டது.
இதைப்போலவே கன்னடம் மற்றும் மராத்தி படங்களுக்கும் ரஜினிகாந்த் பெயரை தலைப்புக்காக பயன்படுத்தியிருந்தார்கள்.
இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தலைப்பில் ஒட்டியிருக்கும் ரஜினிகாந்த் என்ற பெயரை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
பெருமான் என்ற படத்தலைப்பில் ரஜினிகாந்த் பெயரையும் சேர்த்துள்ளார்கள். சர்வத்தையும் குறிக்கும் பெயரோடு தன் பெயரை இணைத்ததை ரஜினி சார் விரும்பவில்லை. தன்னுடைய பெயரை எந்த வகையிலும் பயன்படுத்த ரஜினி சார் அனுமதி கொடுக்கவில்லை.
திரைப்படத் தலைப்புகளுக்காக அனுமதியின்றி அவர் பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்று சூப்பர் ஸ்டாருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
|
No comments:
Post a Comment