'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குழுமத்தின் டிவி சேனலான ஜூம் சூப்பர் நோவா 2010 இந்தியாவின் டாப் 50 மனிதர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
டாப் 50 பட்டியலில் தென்னிந்தியாவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் இடம் பெற்று உள்ளனர்.
இப்பட்டியலில் சல்மான் கான் முதல் இடத்தையும், அமீர் கான் இரண்டாம் இடத்தையும் பிடித்து உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். ' ரஜினி எப்போதும் கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படுபவர்' என்று புகழாரம் சூட்டியுள்ளது ஜூம் டி.வி.
இப்பட்டியலில் ஷாருக்கான் 4வது இடத்திலும், ஏ.ஆர். ரஹ்மான் 5வது இடத்திலும், அமிதாப் பச்சன் 6 வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே பெண் கத்ரீனா கைப். முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் 14வது இடம் கிடைத்துள்ளது.
|
No comments:
Post a Comment