Wednesday, December 14, 2011

Coca-Cola ரகசிய கலவை பார்முலா முதல் முறையாக வெளியே வந்தது!

அமெரிக்க குளிர்பான ஜயன்ட் கோகோ கோலா முதல் தடவையாக தமது ரகசிய கலவையின் ரகசிய பார்முலாவை மக்கள் பார்வைக்கு வைக்கின்றது. ஆஹா!, அதைப் பார்த்துவிட்டு, நாமும் கோகோ கோலாவுக்கு போட்டியான ஒரு குளிர்பான உற்பத்தியில் இறங்கி விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். காரணம், இந்த பார்முலா அடங்கிய ரகசியக் குறிப்பை நீங்கள் ஒரு இரும்புப் பெட்டியின் உள்ளேதான் பார்க்கப் போகிறீர்கள். 


இரும்புப் பெட்டி மூடி சீல் வைக்கப்பட்டிருக்கும். 

அமெரிக்கா, அட்லான்டாவில் உள்ள கோகோ கோலா மியூசியத்தில், அவர்களது ‘அதி ரகசிய பார்முலா குறிப்பு அடங்கிய இரும்புப் பெட்டி முதல் தடவையாக பொதுமக்கள் பார்வைக்கு (பலத்த காவலுடன்) வைக்கப்பட்டுள்ளது. கோகோ கோலா நிறுவனம் கடந்த 125 ஆண்டுகளாக வெளியே தெரிந்து விடாதபடி காத்து வருகின்ற ஹஷ் ஹஷ் ரகசியம் இது. சுலபமாக திறந்து காட்டி விடுவார்களா? 

ஒரு காகிதத்தில் எழுதப்பட்டுள்ளத இவர்களது கலவை ரகசியம், இந்த வாரம்வரை பேங்க் ஒன்றின் லாக்கரில் வைத்து பூட்டப்பட்டு இருந்தது. அட்லான்டா நகரில் உள்ள சன் ட்ரஸ்ட் பேங்க்தான் அது. கோகோ கோலா நிறுவனத்தில் பணிபுரியும் உச்ச அதிகாரிகள் இருவர்தான் இந்த ரகசியத்தைப் பார்க்க அனுமதிக்கின்றது நிறுவன விதிமுறை. 

ரகசியம் தெரிந்த இரு உச்ச அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்றாக விமானத்தில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. 

தற்போது கோகோ கோலா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ப்ரமோஷன் ஒன்றுக்காகவே ரகசியத்தை வெளியே கொண்டு வந்துள்ளார்கள். பேங்க் லாக்கரில் இருந்து குறிப்பிட்ட இரு உச்ச அதிகாரிகளால் பலத்த போலீஸ் காவலுடன் ரகசியம் எழுதப்பட்ட காகிதம் வெளியே எடுக்கப்பட்டு, உடனடியாகவே இரும்புப் பெட்டி ஒன்றில் வைத்து பூட்டப்பட்டது. 

இரும்புப் பெட்டி, அட்லான்டா நகரில் உள்ள கோகோ கோலா மியூசியத்துக்கு எடுத்து வரப்பட்டு, இப்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

1967-ல் வெளியான ஒரு தகவலின்படி, கோகோ கோலா ரகசியக் கலவையில் மல்லி இலை (coriander), நட்மெக், ஆரஞ்சு, லெமன் ஆயில் ஆகியவை ஏதோ ஒரு குறிப்பிட்ட சதவீதக் கலவையில் உள்ளதாக ஒரு குறிப்பு உள்ளது. அப்போது வெளியான இந்தத் தகவலை கோகோ கோலா நிறுவனம் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

No comments:

Post a Comment