இந்துத்வா மற்றும் முஸ்லிம் மத பயங்கரவாதத்தால் பீடித்துள்ள இந்தியாவை கிறித்துவ பயங்கரவாதம் துவம்சம் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது ஆயுதம் ஏந்தா பயங்கரவாதம்.
பயங்கரவாதம் போல் தெரியாத பயங்கரவாதம். ஆயுததாரிகள் செய்யும் அதே காரியம். ஆயுததாரிகளை விட ஆபத்தான கபடதாரிகள் செய்யும் ஊழியம். அந்த நற்செய்தி கூட்டத்தில் இந்த கெட்ட செய்தி தான் காதில் விழுந்தது. "இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவோம். இந்தியாவை இயேசுமயமாக்குவோம்" என்கிற ரீதியில் அந்த கெட்ட செய்தி காதில் விழுகிறது. பல மதத்தவர் வாழும் ஒரு தேசத்தில் "இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவோம்" என்றால் என்ன அர்த்தம்.
ஏனைய மதத்தவரை சீண்டி, போலியான மத மோதலை தூண்டி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதை தவிர வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும். "உங்கள் கடவுள் உங்களுக்கு உயர்வென்றால் உங்களோடு வைத்து கொள்ளுங்கள்"
கணிசமான பகுத்தறிவாளர்கள் வாழும் போதே, மதச்சார்ப்பின்மைக்கு எதிரான கருத்தை, மதச்சார்ப்பின்மைக்கு வேட்டு வைக்க கூடிய கருத்தை விதைக்கும் தைரியம் எப்படி வந்தது. சிறுபான்மை என்கிற அஸ்திரத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அசட்டு துணிச்சல் போலும். அந்தந்த மதத்தவர்கள், தங்கள் கடவுளுக்கே இந்த தேசத்தை காணிக்கையாக்குவோம் என்றால் அமைதி செத்து போகும்.
பகுத்தறிவாளர்களுக்கு தான் - இனி நிறைய வேலை உள்ளது இந்த கிறித்துவர்களிடம். சாதீய பேய், இந்து மதத்தில் இருந்து கூடு விட்டு கூடு பாய்வது போல் கிறித்துவத்திற்கு போய் உள்ளது. கிறித்துவதளமொன்றின் பெயரை பார்த்தாலே, சாதீயம் கிறித்துவத்தை பிடித்து எப்படி ஆட்டுகிறது என்பதை பார்க்கலாம். "கிறிஸ்தவ பிராமணாள்" என்பது அந்த வலைப்பூவின் பெயர்.
இதில் எத்தனை எத்தனை உள்நோக்கம் உள்ளதை யார் அறிவார். இது கிறிஸ்துவ பார்ப்பணியம். தாழ்த்தப்பட்டவர் நிலை மதம் மாறியும் தாழ்ந்துள்ள போது, பகுத்தறிவாளன் கேள்வி கேட்க நியாயம் உள்ளது. "எண்ணிக்கையை மட்டுமே உயர்த்த விரும்புகிறாய்.தாழ்ந்தவனை தாழ்ந்து வைத்து இருக்கவே விரும்புகிறாய்" சரி தானா. பிராமணியம் போகும் திசையை பார்த்து, போராடும் பொறுப்பு பகுத்தறிவுக்கு உள்ளது. சாதிகென்று தனித்தனியாக கிறித்துவ நிகழ்ச்சி நடத்தும் கொடுமையை அறிவிர்களா.
"இந்தியாவை இயேசுவுக்கு காணிக்கையாக்குவார்களாம்"... தான் பிறந்த நாட்டிலும் (இஸ்ரேல்) தான் வளர்ந்த நாட்டிலும் (பல அரபு நாட்டிலும்) காணாமல் போன கிறித்துவம், மேற்குலக நாடுகளில் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து,செத்து கொண்டு வரும் கிறித்துவம், இந்தியாவின் மதச்சார்ப்பின்மையை காவு கொடுக்க, அமைதியை கெடுக்க மேற்குலக நாடுகள் நிதியுதவிகளுடன், எதிர்காலத்தில் இந்தியாவில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயலலாம். அது இப்போதே அங்காங்கே தெரிகிறது. பாகிஸ்தானின் ஆயுத உதவி செயலை போன்றதே, மேற்குலகத்தின் இந்த நிதி உதவி.
ஒரு தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான கருத்து, பல மதத்தவரையும் அவமானப்படுத்தும் மற்றும் சீண்டும் கருத்து - கிறிஸ்துவம் வெளிப்படுத்தும் கருத்துக்கள். அரசிற்கு மதச்சார்ப்பின்மையை காக்கின்ற மிக பெரிய பொறுப்பு உள்ளது. அதையும் விட மிக பெரிய பொறுப்பு,
|
No comments:
Post a Comment