ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் அவர்கள் தமிழில் ஒளிப்பதிவைப்பற்றிய தகவல்கள் அடங்கி புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். 'அசையும் படம்' என்னும் இந்த புத்தகம் ஒளிப்பதிவின் அடிப்படை, சினிமா தோன்றிய வரலாறு மற்றும் ஆதார தொழில்நுட்பம் ஆகியவற்றை விவரிக்கிறது.
எளிமையாக, தெளிவாக எல்லாருக்கும் புரியும்படி மிகுந்த தகவல்கள் கொண்ட புத்தகம் இது. சொல்லப்போனால் ஒளிப்பதிவில் ஆர்வம் இருக்கும் அனைவரின் கையிலும் இருக்கவேண்டிய ஒரு கையேடு இது.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா 6-1-11 அன்று பிரசாத் லேப் திரையரங்களில் நடந்தது. விழாவிற்கு ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு.பாலுமகேந்திரா, இயக்குனர்கள் திரு.ஜனநாதன், பாண்டிராஜ் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
"நான் பதினைந்து ஆண்டுகளாக சினிமாவில் போராடி சிரமப்பட்டு கற்றுக்கொண்டதை இந்த புத்தகம் மொத்தமாக பதிவுசெய்திருக்கிறது. இந்த புத்தகம் முன்பே வெளிவந்திருந்தால் நான் இவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டியதில்லை. நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். இந்த புத்தகத்தை வெளியே நின்று விற்றுக்கொடுக்க வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்"- இயக்குனர். ஜனநாதன்.
"இந்த புத்தகம் ஒளிப்பதிவுத்துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் உதவி இயக்குனர்களுக்கும், விஷூவல் கம்யூனிகேஷன் படிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" - இயக்குனர்.பாண்டிராஜ்
"இந்த புத்தகத்தை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஏக்கம் வருகிறது, இது நான் செய்திருக்க வேண்டிய செயல் அல்லவா. செய்ய தவறி விட்டோமே என்ற குற்றயுணர்ச்சி ஏற்படுகிறது" - ஒளிப்பதிவாளர், இயக்குனர். பாலுமகேந்திரா
புத்தகம் கிடைக்கும் இடம்: விலை ரூபார் 150.
கீற்று பதிப்பகம்
23,அரங்கநாத நகர்
சிதம்பரம் - 608 001
செல்: 97896 92295
சென்னை புத்தக கண்காட்சியில்:
விஜயா பதிப்பகம்
கடை எண்:134-135
ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார்
செல்:9025775455
மின்னஞ்சல்:cjrframes@gmail.com
|
No comments:
Post a Comment