டிஜிட்டல் விபச்சாரம்! அதிர்ச்சித் தகவல்!! எச்சரிக்கை ரிப்போர்ட்
வாழ்வில் ரொம்பவும் நல்ல மனிதர்கள் மிக சாதாரணமாய் மிடில் கிளாஸ் மக்களாய், பலரும் அறியாத படி, எங்கோ ஒரு மூலையில் இருப்பதை பல முறை கவனித்துள்ளேன். அதே போல் ஒரு நல்ல பாடகி நிறைய பாடல்கள் பாடா விடினும் என்றைக்கும் மனதில் நிறைகிறார். அவர் தான் ஜென்சி.
80 - களில் இளையராஜா இசையில் சில மறக்க முடியாத பாடல்களை தந்தவர் ஜென்சி.
தமிழில் முதன் முதலில் மகேந்திரனின் classic-கான " முள்ளும் மலரும்" படத்தில் "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்" என்ற பாடலை பாடினார். இவரது எந்த பாடலை கேட்கும் போதும் மனம் பொன்னூஞ்சல் ஆடவே செய்கிறது.
பிறகு "ப்ரியா"வில் ஜேசுதாசுடன் இணைந்து " என்னுயிர் நீதானே" பாடலை பாடினார். இந்த பாடலும் ஒரு அற்புதமான பாடல்; பல்லவியில் ஜேசுதாசும், இவரும் மாறி மாறி உடனுக்குடன் பாடுகிற மாதிரி மிக அழகாக இந்த பாடலை வடிவமைத்திருப்பார் இளைய ராஜா
பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகளில் இரண்டு பாடல்கள்..
"தம்தன தம்தன தாளம் வரும்.. " இது மிக வேகமாக செல்லும் பாடல். அனாயசமாக பாடியிருப்பார் ஜென்சி.
இன்னொரு பாடலான "இதயம் போகுதே.. எனையே பிரிந்தே" அந்த காலத்தில் காதலர்களின் தேசிய கீதமாக ரொம்ப காலம் இருந்தது!!
அடுத்து பாரதி ராஜாவின் நிறம் மாறாத பூக்களில் மீண்டும் இரு பாடல்கள்..
"ஆயிரம் மலர்களே மலருங்கள்.. " What a song!!!
"கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மாறலாம்;
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ?
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்...
நீ யாரோ? நான் யாரோ? யார் சேர்ப்பதோ"
என்ற வரிகளை ஜென்சி பாடுவதையும், அதன் இடையில் வரும் "ஹம்மிங்"கையும் ஒரு முறை கேட்டு பாருங்கள். அந்த பாடலும் இந்த இடமும் பிடிக்காவிடில் பணம் வாபஸ் :))
இதே படத்தில் இன்னொரு பாடலான "இரு பறவைகள். மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.." என்ற பாட்டும் அதிகம் வெளியே தெரியா விடினும் கூட ஒரு அற்புதமான மெலடி, நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று! (அலுவலகமோ, வீடோ பெரும்பாலான நேரம் பாட்டு கேட்டு கொண்டே வேலை செய்வது தான் நம்ம வழக்கம்! வீடு மற்றும் ஆபிஸ் கணினியில் ஜென்சி பாடல்களுக்கு தனி folder உண்டு !))
மெலடி மட்டுமில்லாமல்,
தோட்டம் கொண்ட ராசாவே (பகலில் ஒரு இரவு) /
ஹே மஸ்தானா ( அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
போன்ற fast beat பாடல்களும் கூட அவர் பாடியிருக்கிறார். ஆனால் அவர் இன்றும் நினைவு கொள்ள படுவது அவரது மெலடிக்காக தான்.
1978 முதல் 1982 வரை நான்கே ஆண்டுகள் தான் தமிழ் சினிமாவில் பாடியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜென்சி பாடுவதை நிறுத்தி விட்டார் என நினைக்கிறேன். ஒரு முறை Super Singer Junior-ல் Judge ஆக வந்திருந்தார். ஒரு பாடகி போல் இல்லாமல் மிகவும் வெள்ளந்தியாய் பேசினார்! எந்த குழந்தையையும் எந்த குறையும் சொல்ல வில்லை. வெறும் பாராட்டுக்களால் அவர்களை நனைத்தார். ரொம்ப innocent-ஆன சிரிப்பு!! அவரது குழந்தை உள்ளம் பார்க்க முடிந்தது
****************
மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (கரும்பு வில்) ;
பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே (டிக் டிக் டிக் );
காதல் ஓவியம் பாடும் காவியம் (அலைகள் ஓய்வதில்லை) ;
தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாச பறவைகள்)
போன்ற எத்தனையோ பாடல்கள் என்றும் கேட்டு ரசிக்க தக்கவை.
கடவுள் அமைத்த மேடை என்ற படத்திலிருந்து (என்னது அப்படி ஒரு படம் வந்துச்சா? நோ நோ அப்படியெல்லாம் கேக்கபடாது) " மயிலே மயிலே" என்ற ஒரு பாட்டு ஜென்சி கொஞ்சி கொஞ்சி பாடியிருப்பார். கூடவே SPB-யும். ரொம்ப அசத்தலான பாட்டு இது!!
எல்லாவற்றையும் விட எனக்கு ரொம்ப பிடித்த ஜென்சி பாடலுடன் நிறைவு செய்கிறேன்
ஜானி படத்தில், " என் வானிலே ஒரே வெண்ணிலா" என்ற பாட்டு.. இதில்,
"சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே..... வார்த்தைகள் தேவையா?? "
என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார் பாருங்கள்..
ஆஹா.. இதனை பாராட்ட ..வார்த்தைகள் தேவையா??
டிஸ்கி: முன்பு பாடல்களின் வீடியோ இன்றி ஓராண்டுக்கு முன் பதிந்திருந்தேன். அதனை மிக ரசித்த சக பதிவர் பால ஹனுமான் இப்பதிவை பாடல்களுடன் தனது தளத்தில் இங்கே பகிர்ந்தார். பாடல்களுடன் நீங்கள் ரசிக்க மீள் பதிவு செய்யப்படுகிறது !
|
No comments:
Post a Comment