ராணா படம் இப்போதைக்கு இல்லை என முடிவானப் பிறகு ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அவதார் போல 3டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் என அறிவிக்கப்பட்டது.
கோச்சடையான் என்பவர் கி.பி. 735-ல் வாழ்ந்த பாண்டிய மன்னன் ஆவார். பயங்கர வீரம், தீரம் மிக்க அவனது வரலாற்றை அடிப்படையாக கொண்டே இந்தப் படம் தயாரிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினி இந்தப் இயக்குகிறார். டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.கோச்சடையான் படத்தை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையின் இந்தப் படத்தில் நடிப்பவர்கள் பற்றி நாளொரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இசையமைப்பாளர் மட்டும் தயாரிப்புத் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்த வருடம் ஏ. ஆர். ரஹ்மான் எந்த ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட இசையமைக்க ஒப்புக் கொள்ளவில்லை . இந்த வருட இறுதியில் ரஜினியின் ராணாவுக்கு மட்டும் ஒப்புக் கொண்டார். அந்த ராணாப் படமும் அடுத்த ஆண்டுக்கு(?) தள்ளிப் போன நிலையில், ஏ.ஆர் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ள ஒரே தமிழ்ப் படம் கோச்சடையான்தான். ரஜினியின் படங்களான முத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரனைத் தொடர்ந்து மீண்டும் இந்தப் படத்தில் தான் ரஜினியுடன் கைகோர்க்கிறார் ரஹ்மான்.
சிவாஜியில் கலக்கிய பீட்டர் ஹெயின் இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகளை அமைக்கிறார்.
அடுத்து இந்தப் படத்தில் ரஜிகாந்தின் தங்கையாக நடிகை புன்னகை இளவரசி சினேகா நடிப்பதாகத் தெரிகிறது.
இந்தப்படத்தின் கதாநாயகி யார் என்பதில்தான் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.
போன வாரம் முழுதும் நடிகை அனுஷ்கா நடிப்பார்கள் என செய்திகள் வெளிவரத் தொடங்கியது. ஆனால் அவரிட கால்ஷீட் இல்லை எனவும் சொல்லப்பட்டது. அனுஷ்கா தற்போது விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்திலும், கார்த்தி ஜோடியாக பெயரிடப் படாத ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்றிலிருந்து ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அசினுடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை அசினுக்கு கைவசம் எதுவும் பெரிதாக படங்கள் இல்லை. இந்தியில் மட்டும் ஒரு படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
எந்தப் பிரச்சனையும் இப்போது அசினுக்கு இல்லாததால் அவர் இந்தப் படத்தில் நடிக்க தாராளமாக கால்ஷீட் தருவார் என்கிறார்கள்.
பார்ப்போம் தலைவர் படம் என்றால் தினம் ஒரு பரபரப்புத் தகவல்கள் வந்துக்கொண்டிருக்கிறது. பல கோடி ரஜினி ரசிகர்களில் நானும் ஒரு ரஜினி ரசிகனாக முதல் நாள் முதல் ஷோ படம் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
|
No comments:
Post a Comment