ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால் அவரே அடுத்த முதல்வர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. நிச்சயம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார் என்று சினிமா பிரபலங்கள் தெரிவித்தனர்.
ரஜினியின் 62வது பிறந்த நாள் விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெகு பிரமாண்டமாக நடந்தது. கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் குவிந்து விட்டது. அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்பியும் சுமார் 10000 ரசிகர்கள் வரை குவிந்தனர். வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியிருந்த மொத்த பகுதியும் ரஜினி ரசிகர்கள் மயமாகக் காட்சி தந்தது.
வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் பலவற்றிலுமிருந்து ஏராளமாக பணம் செலவழித்து ரசிகர்கல் வந்திருந்தனர்.
விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த மாதிரி பேசியது,”தமிழகத்தின் அடுத்த முதல்வர் தலைவர் ரஜினிதான்,” என்பதே. மூத்த இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்பட அனைவரும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினர். நிச்சயம் அவர் தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்று மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனால் உற்சாகத்தின் விளிம்புக்கே போய்விட்ட ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ரசிகர்களின் மனநிலை புரிந்து போலீசாரும் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டனர்.
விழாவுக்கு ரஜினி வருவார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தனர். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.
|
No comments:
Post a Comment