Wednesday, December 14, 2011

சாராயம் குடிக்கும் பிரபல நடிகைகள் - பரபரப்புத் தகவல்கள்!!


நடிகர் ,நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில வெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ?

குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். (இப்படியெல்லாம் நமக்கு தோணலையே என்றுதான்)

கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு மேகம் போல மிதக்குமாம். கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் இந்த அழகுராணி. இந்த கண்டுபிடிப்பு மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி, இன்று அநேக நடிகைகள் இந்த பீராபிஷேகத்தைதான் விரும்புகிறார்களாம்.

தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நீள்கிறது இந்த பட்டியல். சமீபத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் படப்பிடிப்பு செலவில் பாட்டில் பாட்டிலாக பீர் கணக்கு வர, என்ன ஏது என்று விசாரித்தார்களாம். அங்குதான் தெரியவந்தது இந்த பீராபிஷேக மேட்டர். சோனியா அகர்வாலின் பஞ்சு ஹேருக்கு இந்த பீர்தான் காரணமாம்.

No comments:

Post a Comment