தனது சொந்த இனம் முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது வலுவான முதல்வர் நாற்காலியில் இருந்து கொண்டு எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் தனது சொந்தக் குடும்பத்தை முன்னேற்றவும் வளப்படுத்தவுமே திட்டமிட்டு செயற்பட்டு வந்த உங்களை நாங்கள் எப்படி மறப்போம்?
ஏழு கோடித்தமிழர்கள் பக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்க வெறும் இரண்டு கோடிச் சிங்களவர்களால் எம்மினம் குதறப்பட்ட கொடூரத்தை எப்படி ஜீரணிப்பது.
இவ்வளவு சாதனைகள் செய்த உங்களுக்கு மீண்டும் ஒரு பதவி நாற்காலி தேவையா?
தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுத் தலைவர்கள் ஈழத்தில் கொல்லப்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் நேரங்களிலெல்லாம் குறிப்பாக ஈழ ஆதரவு அலை ஒரு வீச்சுடன் உருவாகும் நேரங்களில் எல்லாம் சாமர்த்தியமாக முறியடிப்பதில் அத்தனை வல்லவராக இருந்துள்ளீர்கள்..
குறிப்பாக ஈழ ஆதரவு அலை தமிழகத்தில் வீறு பெற்று எழும் காலங்களில் தான் அப்போராட்டங்களைப் பொறுப்பேற்று தன் கைகளில் எடுத்து நடாத்துவதாக பாசாங்கு செய்யும் கருணாநிதி சில வட்டப் படிமுறைகளையும் வைத்துள்ளார்.
மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தந்தி அனுப்புதல் கடைசியாக டெல்லிக்கு கடிதம் அனுப்புவதோடு போராட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக குன்றச் செய்து அப்படியே இல்லாமல் செய்து விடுவார்.
குறிப்பாக எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ தன் மீது சிறிய குற்றச்சாட்டை முன் வைத்தாலும் கூட பாய்ந்தடித்து பறந்து வந்து பதில் தருவதில் காவியக் கலைஞர் காட்டும் வேகமோ அலாதியானது. யார் குற்றச்சாட்டு எழுப்புகிறார்களோ அவர்களின் ஏழேழு சந்ததியையும் போட்டுக் கிழித்து எழுப்பிய குற்றச்சாட்டை ஒரு வித நரித் தந்திரத்தோடு அப்படியே கிள்ளித் தெளித்து முறியடிக்கும் அரசியல் சாணக்கியர்.
ஆனால் கண்ணெதிரே தன் உறவுகள் கொடூரமாய்க் கொல்லப்பட்ட போது மௌனம் காத்து எழுந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் சொல்லாமலே தட்டிக் கழித்தார்.
முள்ளிவாய்க்கால் துயரம் இடம்பெறுவதற்கு சில நாள்கள் முன்னதாக எம்மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்து பொறுக்க முடியாமல் தன்னைத் தானே தீயில் மாய்த்து மாண்ட மாவீரன் முத்துக்குமரன் தான் கடைசியாக வரைந்த மடலில் கூறிய சில வரிகள், “தற்போது உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயரைச் சூட்டிக் கொள்ளவும் தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தான் குடும்பச் சொத்தாக்கிக் கொள்ளவும் விரும்புகிறவர் தான் இந்தக் கலைஞர்”. என்று மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார் சிந்தனைவாதி முத்துக்குமார்.
முத்துக்குமாரின் தற்கொடையின் பின்னர் தமிழகத்தில் எழுந்த ஒரு மாபெரும் ஈழ ஆதரவுஅலையை கருணாநிதி எவ்வாறு அடக்கினார்.
மக்களுக்காக உயிர் நீத்த அந்த மாவீரனின் உடலத்தை மக்கள் பார்வைக்கு வைக்க விடாமல் பொலிஸார் மூலம் அடக்கம் செய்வதற்கு அத்தனை முயற்சிகளையும் எடுத்தார் கருணாநிதி..
ஆனால் ஈழ ஆதரவுத் தலைவர்களோ விடவில்லை தொடர்ந்து முயற்சித்து சென்னை கொளத்தூரில் பல்லாயிரக்காண மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே எம் வீரப் புதல்வனின் இறுதி ஊர்வலம் இடம்பெற்றது.
இரவு 10.00 அளவிலே வீரபபுதல்வனின் உடலம் இளைஞர்களின் குறிப்பாக கல்லூரி மாணவர்களின் கதறல்களுக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இடையே மாயானத்துக்கு கொண்டு போகும் நேரத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிடுகின்றார் கருணாநிதி.
நாளையிலிருந்து பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் காலவரையின்றி விடுமுறை..
மாணவர்கள் அனைவரும் விடுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். இப்படியாக தமிழகமெங்கும் நிகழ்ந்த கொந்தளிப்பு நிலையை திட்டமிட்டே சாதுரியத்துடன் அடக்கி விட்டார் கருணாநிதி.. இல்லாவிடின் அன்றே ஒரு எகிப்து புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும்.
தமிழ் மக்களை மஹிந்த அரசு கொன்று குவித்த தொடர் கொடுமைகளின் போது தமிழினத்தலைவராக போற்றப்பட்டவரே உங்களின் மௌனம் கலையாதா? என்று நித்தமும் பல்லாயிரக்கணக்கான கதறல் கேள்விகள் உலகெங்கும் இருந்து வந்தபோதும் ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னன் போல் எப்போதும் போல மௌனம் சாதித்தார்.
இவருக்கு எதிராக உலகெங்கும் எழுந்த கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் கண்டு கொள்ளாமல் இருந்தார்.
தன்னுடைய குடும்பத்தையும் குடும்பவாரிசுகளையும் எவ்வாறு உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலுக்குள் கொண்டு போகலாம் என்பதிலேயே குறியாக இருந்தார்.
தற்போது கருணாநிதியின் குடும்ப வாரிசுகளில் ஒருவர் உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் 315 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதிப் போரின் உச்சத்தின் போது அவர் காட்டிய அதிக பட்ச கருணை டெல்லிக்கு கடிதம் எழுதியது தான்.
பின்னர் நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தருவதில் சிக்கல் எழுந்த போது முதல் ஆளாக டெல்லிக்குப் பறந்தார். கிட்டத்தட்ட ஒரு வார காலத்தை உறவுகளுக்கு அர்ப்பணிக்கும் போராட்டத்துக்கு ஒதுக்கினார்.
அதையும் தவிர்த்து கருணாநிதி செய்த அதிரடிக் காரியம் ஒன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
தனது இரண்டு உத்தியோக பூர்வ மனைவிகள் சகிதம் அண்ணா சமாதிக்கு வந்து உண்ணாவிரதம் ஆரம்பித்து மூன்று மணிநேரத்தில் போர் முடிந்ததாக அறிவித்து தனது அதிரடியான அதிசயமான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
அப்போது இவரின் செய்தி உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. முள்ளிவாய்காலில் உள்ள தமிழ் மக்களுக்கு புலிகளின் குரல் வானொலி மூலம் அதன் அறிவிப்பாளர் இறைவன் இச்செய்தியினை மகிழ்வுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் அறிவித்து அடுத்த நிமிடமே முள்ளிவாய்க்கால் எங்கும் கதறல் சத்தங்கள்அப்போது மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டார்கள்.
உலகத் தமிழர்களின் தலைவர் பிரபாகரனின் வயது முதிர்ந்த தாயார் சிகிச்சைக்காக வந்தபோது தமிழ் புத்திஜீவிகளின் கவனம் முழுவதும் அவரின் மீது குவிந்து விடும் என்று அறிந்த கருணாநிதி தமிழக மண்ணில் கூட காலடி எடுத்து வைக்க அனுமதிக்காமல் திருப்பியனுப்பினார்.
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம் என்று முழங்கிய தமிழன் எங்கே. விரக்தி, வியாதி, வேதனையுடன் மருத்துவம் நாடி வந்த தாயின் நிலை… உங்களின் துரோகத்தனத்தை எப்படி மறக்க முடியும் கலைஞரே?
ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொத்தோடு கொல்லப்பட்டு ஒருவருட நிறைவுநாளின் பின்னர் செம்மொழி மாநாடு என்று ஒரு தனக்குத் தானே பாராட்டும் பித்தலாட்ட மாநாட்டை முகாம்களில் கஞ்சிக்கும் வழியில்லாமல் தமிழினம் தவிக்கையில் பலகோடி ரூபாய் செலவில் அரங்கேற்றினார்.
நித்தமும் தனக்குத் தானே பாராட்டு விழாக்களை நடாத்தியும் நமீதாவின் மானாட மயிலாடவையும் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எங்கே புரியப் போகிறது ஈழத் தமிழர்களின் துயரம்.
ஈழத்தமிழர் படுகொலையில் முதல் குற்றவாளி கருணாநிதி. உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் அறிவிக்கபாடாத தலைவராக தன்னை சொல்லிக் கொண்டு திரியும் கருணாநிதிக்கு ஏனோ உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட யாருக்கும் விலை போகாத தலைவன் பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம் நான் தான் உலகத் தமிழர்களின் தலைவர் என்ற மமதை.
மனித குல வரலாற்றில் எங்குமே நடந்திராத முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது பெண்கள் குழந்தைகள் என்று கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போதும் இருக்க நிழலில்லை, உண்ண உணவில்லாமல் இருந்த போதும் தாயக தேசத்தில் தங்கள் சொந்தங்கள் செத்து மடிவதைப் பார்த்து புலம்பெயர் நாடுகளிலும் நிம்மதியில்லாமல் இருந்தார்கள்.
இவ்வளவும் நடந்த போதும் வெறும் பதவிக்காகவும் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் கண்ணை மூடி வாயைப் பொத்தி ஈழத் தமிழர்க்கு வரலாற்றுத் துரோகத்தை இழைத்து விட்டார் கருணாநிதி.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியையும் இத்தாலி சோனியாவையும் திருப்திப்படுத்தவே போராடங்களை வன கரம் கொண்டு ஒடுக்கினார் கருணாநிதி.
கருணா (நிதி) போன்ற தமிழ் இனத் துரோகிகள் இனியும் எம் தமிழ்ச் சாதியில் பிறக்கக் கூடாது.. ஈழத் தமிழர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் கருணாநிதியின் ஆட்சி ஒரு கறை படிந்த கறுப்புப்பக்கமாகவே என்றும் இருக்கும்.
அந்த நேரம் உலகெங்கும் வாழும் தமிழர்கள் கருணாநிதியின் மீதான கோபத்தை பலவாறாக வெளிப்படுத்தினார்கள்..
|
No comments:
Post a Comment