Thursday, December 8, 2011

சீரழிந்த இளம்பெண்கள்! காதலனின் வக்கிர கேமரா!

இளம்பெண் உமாராணிக்கு நாளை திருமணம். ஆனால் இன்று ஆற்றுக்குக் குளிக்கப் போனவள் வீடு திரும்பவில்லை. ஊர் முழுக்க தேடியலைந்த உமாராணியின் அம்மா தேவிகா... பதறியடித்தபடி அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்... 21-ந் தேதி ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு.


""ம்... விடிஞ்சா கல்யாணம்... பொண் ணை காணலை. வேறென்ன... விருப்பமில் லாத ஒருத்தனுக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செஞ்சிருப்பீங்க... அவ விருப்பப்பட்டவ னோட ஓடிப்போயிருப்பா. சரி... சரி... எப்படியா இருந்தாலும் மாலையும் கழுத் துமா ஸ்டேஷன்லதான் வந்து நிப்பா... சொல்லி அனுப்புறோம் வாங்க'' என்று காக்கிகள் ஆறுதல்படுத்த... ""அய்யோ அவ ஆசைப்பட்டவனுக்குத்தானே கல்யாணம் பண்ணிவைக்க ஏற்பாடு பண்ணினேன். எங்கபோயி தொலைஞ்சாளோ?'' என்று தாய் தேவிகா கதற... புகாரை வாங்கிக்கொண்டு சீரியஸாக தேட ஆரம்பித்தனர் காக்கிகளும்.
இந்த நிலையில்தான்... இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை மதியம் நாகுடி மூடுபாலம் அருகே ஒரு சாக்குமூட்டை கிடக்க... மக்கள் கூட்டம் குவிந்திருக்கிறது.

தேவிகாவையும் கூட்டிக் கொண்டு போனது போலீஸ். சாக்குமூட்டைக்குள் சடலமாகக் கிடந்தாள் இளம்பெண் உமாராணி.

உமா கொலை செய்யப்பட்ட தன் பின்னணி தகவல்களை விசாரித்தபோது... ""மூர்த்திங்கிற பையனை லவ் பண்ணியிருக்குங்க இந்த உமா. இந்த மூர்த்தி இருக்கானே இவன் கிராமத்துல பொறந்தாலும் கில்லாடிப் பயலா பொறுக்கித்தனமா சுத்திக்கிட்டி ருப்பான். இவன் அண்ணன் வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்ததால ஓரளவுக்கு வசதி. உமாராணியோ ஒன்பதாவது வரை படிச்சுட்டு டவுன்ல ஒரு ஃபோட் டோ ஸ்டுடி யோவுல வேலை பார்த்தது. அப்புறம் மூர்த்தியின் ஊரிலுள்ள கயிறு திரிக்கிற கம்பெனியில வேலை பார்த்துக் கிட்டிருந்தது. இந்த மூர்த்தி பய வீட்டு தோப்பு வழியாத்தான் கம்பெனிக்குப் போகவேண்டியிருக்கும். அப்படிப் போகும்போது... லவ்வுங்கிற பேர்ல தன்னோட மோட்டார் ரூம், தோப்புன்னு கூட்டிட்டுப் போய் அனுபவிச்சவன்... அதோட விட்டிருந்தா பரவாயில்ல. அவகூட உல்லாசமா இருக்கிற மாதிரி விதவிதமா கேமராவால படம் பிடிச்சிருக்கான்.


அந்தப் பொண்ணுக்கு பீர் வாங்கிக் கொடுத்து குடிக்கவெச்சு... எப்படி எப்படியெல்லாம் கேவலமா படம் பிடிக்கணுமோ அப்படியெல்லாம் எடுத்திருக்கான். ப்ச்... பாவம்ங்க ஒரு தடவை "ஏன் மாமா என்னை இப்படில்லாம் படம் எடுக்குறே'ன்னு கேக்குது உமா. அதுக்கு இந்த ராஸ்கல், "சம்பாதிக்கத்தான்'னு அசால்ட் டா சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகி யிருக்கு. எனக்கென்னவோ இதையெல்லாம் இண்டர்நெட்டுக்கு வித்துருப்பானுங்களோன்னு தோணுது. இவனோட நண்பர்களான குமார், கோபியும் சேர்ந்துதான் இப்படிக் கேவலமான வேலையில ஈடுபட்டிருக்கானுங்க. இப்படி வக்கிர வேலையில் ஈடுபடுத்தின மூர்த்தி இந்த பொண்ணையா கல்யா ணம் பண்ணிப்பான்?

அதான் நாளைக்கு கல்யாணம்னா... இன்னைக்கு ஆத்துக்குக் குளிக்கப்போன புள்ளைய மோட்டார் ரூமுக்கு கூட்டிட்டுப் போய் கரண்ட் ஷாக் வெச்சு கொன்னுட்டு... சாக்குமூட்டையில கட்டி ஆத்துல விட்டுட்டு ஊரைவிட்டே ஓடிட்டானுங்க'' என்ற பகீர் பின்னணி சொன்னவர் அந்த சி.டி.யையும் நம்மிடம் கொடுத்தார்.
அடப்பாவமே... அவர் சொன் னது போலவேதான் அந்த வீடியோ காட்சிகள் நம்மை வேதனைப்பட வைத்தன. மூர்த்தியின் வாழைத்தோப் பில் சேலை, தாவணியுடன் குடும்பப் பெண்ணாக தோன்றுகிறாள் உமா ராணி. பிறகு படிப்படியாக மூர்த்தி சொல்வதற்கிணங்க ஆடைகளை அவிழ்க்கிறாள். இப்படி பலவிதமான இடங்களில் விதவிதமாக தோன்றி ஆபாசமாக நிற்கிறார். அதோடு மூர்த்தியுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணி லாட்ஜில் மட்டுமே பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் ஓடக்கூடியதாக இருக்கிறது இந்த அந்தரங்க காட்சிகள். மேலும் செல்ஃபோனில் எடுக்கப்பட்டது மட்டுமல்ல... தெளிவாகத் தெரியும் அளவுக்கு வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை வக்கிரப்புத்தியோடு மட்டும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால்... பல வீடியோ காட்சிகளில் மியூசிக் அண்ட் மிக்ஸிங் வேலையெல்லாம் செய்திருக்கிறான். அது மட்டுமல்ல... ஒரு மெடிக்கல் ஷாப்பில் அமர்ந்திருக்கும் இன்னொரு இளம்பெண்ணையும் விரட்டி விரட்டி கேமராவில் பதிவு செய்திருக்கிறான். ஆக... மூர்த்தியும் அவனது நண்பர்களும் இதை ஒரு பிசினஸாகவே செய்திருப் பார்கள் என்றுதான் தோன்றுகிறது. 

உமா கொலை சம்பந்தமாக வக்கிர காதலன் மூர்த்தி பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளான்.


கதறியபடி தாய் தேவிகாவோ... ""என் கணவர் இறந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்தேங்க. மூணு மாசத்துக்கு முன்னால பக்கத்து ஊரான மேற்பனைக் காடுவைச் சேர்ந்த சன்னாசி மகன் மூர்த்திங்கிற பையனுக்கு வேறு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க. அப்பதான் இவ மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்கப் போனா. காப்பாத்தி கேட்டப்போதான், அவன்கூட பழகி சுத்தினது... அதனால கர்ப்பமான விஷயத்தை எல்லாம் சொல்லி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. கல்யாண மாலை போட வேண்டிய சண்டாளப்பாவி... சாவு மாலைபோட வெச்சுட்டானே. என்புள்ளை சாவுக்குக் காரண மான அந்த மூர்த்தியையும் அவனது நண்பர்களையும் கடவுள் சும்மா விடாது'' என்று சாபம் விட்டபடி கதறுகிறார். 

காவல்துறை மூர்த்தியை கஸ்டடியில் எடுத்து உண்மை யாக விசாரித்தால்... காதலியின் அந்தரங்கத்தை வியாபாரமாக்கிய மூர்த்தியின் நெட்வொர்க்கையும் இவர்களின் வக்கிர கேமராவில் எத்தனை எத்தனை இளம்பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

No comments:

Post a Comment