வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்ற 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் சேவாக் 219 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிரடி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் டென்டுல்கரில் இரட்டைச் சத சாதனையை 219 ரன்கள் எடுத்த சேவாக் முறியடித்துள்ளார்.
இதுவரை சச்சின் டென்டுல்கரின் 200 ரன்களுக்கு நாட் அவுட் என்ற எண்ணிக்கையே ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்ட சாதனையாக இருந்துவந்தது.
இச்சாதனையை கடந்த வருடம் நிகழ்த்தியிருந்தார் சச்சின்.
எனினும் அவருடன் ஜோடி சேர்ந்து ஓபனராக களமிறங்கும் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் வெஸ்ட் இன்டீஸ் உடனான இன்றைய போட்டியில் 219 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். 219 ரன்களுடன் சேவாக் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சச்சினின் தென் ஆபிரிக்காவுக்கிற்கு எதிராக 200 ரன்கள் எடுத்தமை ஒருநாள் போட்டிகளில் உலக சாதனையாகும். Gwalior இல் வைத்து 2010 பெப்ரவரியில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார் அவர்.
ஷேவாக் சாதனையை நிகழ்த்தியதுடன் அவரை டுவிட்டரில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் யுவராஜ் சிங்க் " நான் Sir Viv இன் பேட்டிங்கை பார்த்ததில்லை. ஆனால் ஷேவாக்கை பார்த்துவிட்டேன். அற்புதமான வீரர். 219 ரன்கள் ஒருநாள் போட்டியில் என்பது நம்பமுடியாது." என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முன்னர் ஷேவாக் 2011 உலக கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கெதிராக 175 ரன்கள் எடுத்திருந்தமை அவரின் அதிக ஸ்கோர் எண்ணிக்கையாக இருந்துள்ளது.
இச்சாதனைக்காக 140 பந்துகளில் 23 பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் என விளாசியுள்ளார் சேவாக்.
முன்னர் சச்சின் 147 பந்துகளில் 200 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்தியா 400 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஒரு நாள் அரங்கில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
|
No comments:
Post a Comment