உண்மைகள் அம்பல மாவதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு கோர்ட் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறது நித்யானந்தர் தரப்பு. ஏப்ரல் 8-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, "நக்கீரனில் ஆதாரம் எதுவுமில்லாமல் பொய்யா எழுது றாங்க. அதற்கு தடை கொடுக்கணும்' என நித்யானந்தர் தரப்பு வக்கீல் வாதம் செய்தார். அவரது வாதங்களுக்கு நக்கீரன் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் பதிலடி கொடுத்தார்.
ஆதாரமில்லாமல் நக்கீரன் எதையும் எழுதுவ தில்லை. வீடியோ, ஆடியோ, பேப்பர் டாக்கு மெண்ட்ஸ், ஃபோட்டோக்கள், பேட்டிகள் என நித்யா னந்தரின் ஒவ்வொரு செயல்பாடு பற்றியும் ஆதாரத் துடனேயே வெளியிட்டு வரும் உங்கள் நக்கீரன் கடந்த இதழில், "ஒப்பந்தம் போட்டு செக்ஸ்-நித்யானந்தரின் புதுமோசடி' என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளி யிட்டிருந்தது. அதில், தனது ஆசிரமத்தில் உள்ள பெண் களிடமும் ஆண்களிடமும் நித்யானந்தர் ஏற்கனவே ஒரு ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கி விட்டார் என்பதால்தான், அவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கத் தயங்குகிறார்கள் என்பதையும், செக்ஸ் உள்பட எல்லாவற்றுக்கும் உடன்படுவதாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறார் என்பதையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.
தனது ஆசிரமத்தில் சந்நி யாசிகளாகியிருக்கிற ஆண்-பெண் சாமியார்கள் 500 பேரிடமும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார் நித்யா னந்தர். நித்யானந்தரின் பிரசங்கத் தால் ஈர்க்கப்பட்டு, அவருடைய பயிற்சிகளால் வசீகரிக்கப்பட்டு, ஆசிரமத்தில் சேர்ந்த யாருமே இந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்க்காமல், சாமியார் மீது வைத்த அளவுகடந்த நம்பிக்கை யால் கையெழுத்திட்டிருக்கிறார் கள். ஆசிரமத் தரப்பிலும், சாமி யாராக மாறுகிறவர்கள் தரப்பிலும் கையெழுத்திடப்பட்டுள்ள ஒரி ஜினல் ஒப்பந்த பத்திரங்களை இங்கே வெளியிட்டுள்ளோம். அந்த ஒப்பந்தத்தில் இருக்கும் வாசகங்கள், அனைத்துவிதமான செக்ஸ் விஷயங்களுக்கும் உடன்பாடு தெரிவிக்கும் வகையிலேயே அமைக் கப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் இதுதான்:
பவுண்டேஷனால் நடத்தப்படும் "குருவிட மிருந்து கற்றுக்கொள்ளுதல்' நிகழ்ச்சியில் தந்த்ரிக் சடங்குகளும் இடம்பெறும். இந்த டாக்குமெண்ட் டை படித்து, கையெழுத்திடும் வாலன்டியர்களே (ஆசிரம உறுப்பினர்கள்) இந்த புரோகிராமில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு பொறுப்பாவார்கள். இந்த புரோகிராமில் ஏற்படும் விளைவுகளுக்கு, தலைவர் (லீடர்) ஸ்ரீநித்யானந்தசாமி, இந்த பவுண்டேஷன், இதன் துணை நிறுவனங்கள், மற்ற வாலன்டியர்கள், மற்றும் இதில் குறிப்பிடப்படாத யாராக இருந்தாலும் அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த நிறுவனத்துடன், நிர்வாகத்துடன், நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பாளர்களுடன் தொடர்பில் இருந்தாலும் அவர்கள் இவற்றிற்கு பொறுப்பாக மாட்டார்கள். அவர்களை வாலன்டியர்கள் பொறுப்பாக்கவும் முடியாது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படும் விளைவுகள், இழப்புகள், அதற்கான நிவாரணங்கள் ஆகியவற்றுக்கு வாலன்டியர்களே பொறுப்பாவார்கள்.
இந்த ஒப்பந்தத்திற்கு உரிமையும் அதி காரமும் தகுதியும் உடைய வாலன்டியர்களே இந்த அக்ரிமென்ட்டில் உள்ள விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கு பொறுப்பானவர்கள். உரிமையுடையவர்களும் பொறுப்புடையவர் களுமாவார்கள். வாலன்டியர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால், வயது வந்தவர்களுக்கான நிகழ்வுகளை (ஹக்ன்ப்ற் ம்ஹற்ங்ழ்ண்ஹப்) ஏற்றுக்கொள்வதும் வைத்திருப்பதும் அவர்களின் சொந்த பொறுப்பைச் சார்ந்த தாகும். சட்டவிதிகளை உணர்ந்து கையெழுத் திட்டிருக்கும் வாலன்டியர்கள், இதற்கு தாங் களே பொறுப்பு என்பதை ஏற்றுக் கொண்ட வர்களாவார்கள். தந்த்ரிக் சடங்குகளில் தொ டர்புடைய பாலுறவு சார்ந்த-வயது வந்தோருக் குரிய நிகழ்வுகள் எவ்வித குற்றத்தன்மைக்கோ ஆட்சேபத்திற்குரியதோ அல்ல என்பதையும் வாலன்டியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்-பெண் தொடர்புடைய பரவச நிலை சம்பந்தமான பழைய தந்த் ரிக் ரகசியங் கள் இந்த புரோகிராமில் கற்றுத்தரப் படுவதுடன் அது பற்றிய பயிற்சியும் அளிக் கப்படும் என் பதை வாலன்டியர் கள் புரிந்துகொள்ள வேண்டும். இதில், ஆண்- பெண் இடையிலான நெருங்கிய உறவையும் ஆன்மீகத் தொடர்பை யும், மகிழ்ச்சி- ஒருங்கிணைப்பு- விடுதலை ஆகியவற்றையும் உருவாக் கக்கூடிய பாலுறவு (செக்ஸ்) சக்தியை அதிகப்படுத்தும் நிகழ்ச்சிகளும் அடங்கியிருக்கும். இந்த நடவடிக்கை கள் உடலுக்கும் மனதுக்கும் சவா லானவை என்பதை வாலன்டியர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இதில் நிர்வாணத்தன்மையும் இருக்கும். அது தொடர்பான காட்சி களும் இடம்பெறும். கிராபிக்ஸ் காட்சி களாக விளக்கக்கூடிய படங்களும் இடம்பெறும். செக்ஸ் நடவடிக்கைகள் பற்றியும் நிர்வாணம் பற்றியும் விளக்கங் கள் தரப்படும். உடல்ரீதியான உறவு- நெருக்கம் ஆகியவை பற்றிய பயிற்சி களும் இருக்கும். இவை தொடர்பாக வாய் வார்த்தைகளிலும் எழுத்துபூர்வ மாகவும் விளக்கங்கள் தரப்படும். செக்ஸ் தொடர்புயை -உணர்வு களைத் தூண்டக்கூடிய ஆடியோ சப்தங்களும் மற்ற வையும் இந்த புரோ கிராமில் இடம்பெறும். இந்த அக்ரிமென்ட்டை படித்து கையெ ழுத்திடும் வாலன்டியர்கள், தாங்க ளாகவே முன்வந்து எவ்வித நிபந்தனையு மின்றி இந்த நடவடிக்கைகளுக்கு ஒப்புக்கொள் கிறார்கள். இதில் தலைவருக்கோ (நித்யானந்தர்), பவுண்டேஷனுக்கோ, நிறுவனத்துக்கோ, நிர்வாகத் துக்கோ, இவற்றுடன் நேரடியாகவோ- மறைமுக மாகவோ சம்பந்தமுள்ள யாருக்கும் இந்த நட வடிக்கைகளில் தொடர்பில்லை என்பதை வாலன்டியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இதில் ஏற்படும் நேரடி-மறைமுக விளைவுகள் அனைத்திற்கும் வாலன்டியர்களே பொறுப்பு.
தலைவருடனும் (நித்யானந்தர்) பவுண்டேஷனுடனும் வாலன்டியர்கள் கொண்டிருக்கும் உற வினால் ஏற்படும் நடவடிக்கைகளுக்கு வாலன்டி யர்களே முழுப்பொறுப்பாவார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தலைவர் உள்பட இந்த புரோகிராமில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய யார் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவோ, இழப்பீட கோரவோ வாலண்டியர் களுக்கு உரிமை இல்லை.
இந்த நிபந்தனைகளை வாலன்டியர்கள் தெளிவாக ஏற்றுக்கொண்டு கையெழுத்திடுவதால் இந்த புரோகிராமின் விளைவுகள் தொடர்பாக எவ்வித இழப்பீடோ, உத்தரவாதமோ கோர முடியாது.
-இதுதான் நித்யானந்தர், தன் ஆசிரமத்தில் சாமியார்களாக-சாமியாரினிகளாக சேரும் அனைவரிடமும் போட்டுள்ள ஒப்பந்தமாகும். இங்கே வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் பவுண் டேஷன் சார்பில் கையெழுத்திட்டிருப்பவர் மா நித்ய சதானந்தா. இவர், ஆசிரமத்தில் நித்யானந்த ருக்கு அடுத்த நிலையில் உள்ள சதானந்தாவின் மனைவி. வாலன்டியர் (ஆசிரம உறுப்பினர்) இடத்தில் கையெழுத்திட்டிருப்பவர் வித்யா விஸ்வநாதன். இவர்தான், தற்போது கோபிகா என்ற பெயர் மாற்றம் பெற்றுள்ள நித்யானந்தரின் பர்சனல் செகரட்டரி. கேரள மாநிலம் காலிகட் டைச் சேர்ந்த இவர் 2003-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டுள்ளார். இதே போன்ற இன்னொரு ஒப்பந்தத்தில் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி கோபிகாவும் மா நித்ய சதானந்தாவும் கையெழுத்திட்டுள்ளனர். ஒவ்வொரு ஒப்பந்தமும் தலா 10 பக்கங்களில் உள்ளன. இரண்டாவது ஒப்பந்தம் போடப்பட்ட தேதியில்தான் கோபிகாவுடனும் ரஞ்சிதாவுடனும் அமெரிக்காவுக்கு சென்றார் நித்யானந்தா. ரஞ்சிதாவும் இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கலாம்.
குருவிடமிருந்து கற்றுக்கொள்ளுதல் (learning from the master) என்கிற இந்த நிகழ்ச்சியும் அதற்கான ஒப்பந்தமும் முழுக்க முழுக்க பெண்களை செக்ஸ் வயப்படுத்தும் திட்டத்துடனேயே போடப்பட்டிருக்கிறது என்பது இதிலுள்ள சாராம்சங்களிலிருந்தே தெரிகிறது. உலகக் கனவுடன் தனது ஆசிரமத்தை வளர்த்த நித்யானந்தாவின் ஒரே நோக்கம், உலகத்தின் பல பகுதிகளிலும் உள்ள பெண்களை தனது இச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. ஓஷோ ரஜனீஷ் பாணியில் தன் ஆசிரமத்தை வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்.
ஆன்மீக மார்க்கத்தில் சிற்றின்பத்தைத் துறந்தால்தான் இறைவனின் திருவடியை அடைய முடியும் என்பது நீண்டகாலமாக உள்ள வழக்கம். இதனை உடைத்து, சிற்றின்பத்தின் மூலம் பேரின்பத்தை அடைவது என்பதுதான் ஓஷோ ரஜனீஷ் முன்வைத்த தத்துவம். இந்த எளிதான வழியினால் பல நாட்டைச் சார்ந்தவர்களும் ஓஷோவி னால் ஈர்க்கப்பட்டனர். அவரது ஆசிரமம் உலகின் பணக்கார ஆசிரமமானது. அங்கே நடைபெறும் புரோகிராமில் உணர்வைத் தூண்டும் இசை ஒலி பரப்பப்படும். அப்போது அங்கிருக்கும் ஆண்-பெண் பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான யாருடனும் இணைந்து கொள்ளலாம். உறவு கொள்ளலாம். அதே பாணியில்தான் தன் ஆசிரமத்தை வளர்க்க நினைத்திருக்கிறார் நித்யானந் தர்.
ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களின்படி, செக்ஸ் என்பது ஆசிரமத்தில் கட்டாயம் என்பது உறுதியாகிறது. செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடும் யார் மீதும் சம்பந்தப்பட்ட பெண்கள் சட்டநடவடிக்கை எடுக்க முடியாது என்கிறது இந்த ஒப்பந்தம். இதன் மூலம் எந்தப் பெண்ணுடனும் ஆசிரமப் பொறுப்பில் இருக்கும் யார் வேண்டு மானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். இந்த ஒரு நோக்கத்திற்காகவே அவர் ஆசிரமம் நடத்தி வந்திருக்கிறார் என்பதும், அதற்கு பழங்காலத்து தந்த்ரிக்குகளை சாதனமாகப் பயன் படுத்தியிருக்கிறார் என்பதும் இந்த ஒப்பந்தத்திலிருந்து தெரியவருகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காரணத்தினால்தான், ஆசிரமத்துப் பெண்கள் பயந்துபோய், தங்களுக்கு ஏற்பட்ட செக்ஸ் கொடுமைகளை வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சந்நியாச பரம்பரையில் தந்த்ராவுக்கு இடமேயில்லை. அகோரிகள் போல நரமாமிசம் சாப்பிடக் கூடியவர்களுக்குத்தான் அதெல்லாம். சந்நியாசிகளோ பிரம்மச்சாரிகளோ இத்தகைய தந்த்ராக்களில் ஈடுபடுவது குற்றம். 64 தந்த்ராக்களில் ஒன்று மட்டும்தான் செக்ஸ் பற்றி குறிப்பிடுகிறது.
சிவபெருமான் சொல்லிக் கொடுத்த 112 சூத்திரங்களில் 6 மட்டுமே செக்ஸ் சம்பந்தப்பட்டது. அதுவும் கூட, கிரகஸ்தர்களுக்குத் தான். அதாவது, கல்யாணமாகி குடும்பம் நடத்துகிறவர்களுக்குத் தான். சந்நியாசிகளுக்குக் கிடையாது. அப்படி யிருந்தும், தந்த்ரா என்ற பெயரில் புரோகிராம் நடத்தி அதில் பெண்களை வசியப்படுத்தும் செக்ஸ் நடவடிக்கைகளுக்கு ஒப்பந்தம் போட்டு ஆசிரமத் துப் பெண்களை நாசப்படுத்தியிருக்கிறார் நித்யானந்தர்.
இப்படியொரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் சட்டத்திலிருந்து தப்பித்துவிடமுடியுமா என நம் மீது நித்யானந்தர் தரப்பு தொடுத்துள்ள வழக்கில் வலுவான எதிர்வாதங்களை எடுத்துவைத்து வாதாடி வரும் நமது வழக்கறிஞர் பி.டி.பெருமாளிடம் கேட்டோம். "இந்தியாவில் உள்ள சட்டங்களின்படி இப்படிப்பட்ட ஒப்பந்தத்திற்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் கிடையாது. சட்டத்தின்முன் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் கற்பழிப்பு-மோசடி உள்ளிட்ட பல குற்றங்களுக்காக நித்யானந்தர் தண்டிக்கப் படுவார்' என்கிறார் அழுத்த மாக.
நித்யானந்தர் ஆசிரமத்து மோசடிகள் இந்தியாவின் சட்டதிட்டங்களையே காலில் போட்டு மிதிக் கும் வகையில் நடந் துள்ளன என்பது இந்த ஒப்பந்தம் மூலம் அம்பலமா கிறது.
|
No comments:
Post a Comment