பத்தே நாளில் பத்து லட்சத்துக்கும் அதிகமான டவுன்லோடிங் பிரசித்தி பெற்ற மற்றும் யூ ட்யூபில் தங்க மெடல் வாங்கிய கொலைவெறி பாடல் என்னுடைய படத்தில் வராது என்று யாரோ கிளப்பி விட்ட புரளியை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
கண்டிப்பாக என்னுடைய த்ரீ படத்தில் அந்த பாடல் இடம்பெறும். அதேசமயத்தில் அந்த பாடலை கொஞ்சம் மெருகேற்றி படத்தில் பாடலாம் என்ற எண்ணம் இருந்தது. இப்போது அந்த எண்ணத்தையும் கை விட்டு விட்டேன்.
நீங்கள் எந்த பாடலை தலையில் தூக்கி வைத்தீர்களோ அதே பாடல் அதே போல ஒரு மாற்றமுமின்றி திரையில் காண்பீர்கள் என்றும் கூறினார்.
இனி வரும் மற்றவர்களுடைய படங்களிலும் இதே போல் இங்க்லீஷ் கலந்து பாட்டுகள் வரும். காலத்திற்கேற்ற மாற்றம் தேவை. பழைய மாதிரி பாடல்களை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்களே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களே சொந்தமாக எழுதி பாடுவார்கள். பாடுகிறார்கள்.
|
No comments:
Post a Comment