கொடி கட்டிப் பறந்த நடிகை ஜெயசித்ராவின் வாரிசு அம்ரேஷ் கணேஷும் நடிக்க வந்துவிட்டார். இப்போது "நானே என்னுள் இல்லை' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இசையும் இவரே. மகனை வைத்து இந்தப் படத்தை இயக்கித் தயாரித்து வருகிறார் ஜெயசித்ரா.
தன்னைப் பற்றி அம்ரேஷ் கணேஷ்:
""அம்மாவைப் பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். அப்பா பாடகர். அதனால சின்ன வயசுலேயே இசை கத்துக்கிட்டேன். பிறகு மியூஸிக் டைரக்டர் மணிசர்மாவிடம் கீ-போர்டு வாசிச்சிட்டிருந்தேன். இப்போ அம்மா இயக்கத்துல ஹீரோவா ஆக்ட் பண்ணிக்கிட்டி ருக்கேன். இப்போதைக்கு என் பயோடேட்டா இவ்வளவுதான். இந்தப் படத்தில் ரெண்டு பாட்டு நானே எழுதி பாடியும் இருக்கேன்'' என்று குழந்தையாய் சிரிக்கிறார் அம்ரேஷ் கணேஷ்.
அம்மா இயக்கத்தில், காதல் காட்சிகள்ல நடிக்கும்போது எப்படி இருந்தது?
"" "ஷூட்டிங் ஸ்பாட்ல நான் அம்மாங்கறதையே மறந்திரு. பெர்பாமென்ஸ்தான் முக்கியம். டேக் பத்தி கவலைப்படாதே'ன்னு ஒவ்வொரு நாள் ஷூட்டிங் ஆரம் பிக்கறதுக்கு முன்னாடியும் தைரியம் சொல்லி, காமிரா பயத்தைப் போக்கிட்டுதான் ஷாட், கட்டே சொல்வாங்க அம்மா.
அப்படி இருந்தும் பாத்ரூமில் ஹீரோயினை கட்டிப் பிடிக்கற சீன் எடுக்கும்போது கூச்சமா இருந்துச்சு! மத்தபடி ஒரு பிரச்சினையும் இல்லை!''
நடிப்புல ரோல் மாடல் யார்? பஞ்ச் டயலாக்கெல்லாம் இருக்கா?
""ஹீரோயிஸம் இல்லாத கேரக் டரா சிவாஜி சார் மாதிரி நடிக்கணும். ஆக்ரோஷத்துல விஜய் பிடிக்கும். பியாண்ட் மெச்சூரிடி இல்லாம பஞ்ச் டயலாக் பேசினா எடுபடாது. இந்தப் படத்துல என் கேரக்டர் ஹீரோவா மாறினதுக்குப் பின்னாடி நடிகனா விஜய் மாதிரி,
"சுண்டிவிட்டா சுனாமி டோய்
நேர்ல வந்தா நிலம் நடுங்கும்
போன்ல பேசினா புயலடிக்கும்'னு
ஒரு டயலாக் இருக்கு!''
மியூஸிக் டைரக்டரா இன்றைய பாடல்கள் பத்தி?
""வார்த்தைகளை இசை அமுக்கி விடுகிறது. வரிகள் தெளிவாகப் புரியற மாதிரி இசை அமைக்கணும்ங் கறதுதான் என்னோட பாணி!''
""ஆர்யா மேனன் நாயகி. கே.எஸ். ரவிகுமார், விசு, பி. வாசு சாரெல்லாம் என்னை வெச்சி டைரக்ட் பண்ணுற மாதிரி ஒவ்வொரு நாள் நடித்திருக்கி றார்கள். 60 நாள் டாக்கி போர்ஷன் முடிச்சிருக்கோம். அதைப் பார்த்து கே.பி. சாரும் கமலும் பாராட்டினது சந்தோஷமா இருந்தது'' என்று சொல்லிப் பூரிக்கிறார் இயக்குநர்- தயாரிப்பாளர்- ஹீரோவின் அம்மா ஜெயசித்ரா!
பத்து மாசம் சுமந்த பிள்ளை யாச்சே! சந்தோஷம் இருக்காதா பின்னே?
|
No comments:
Post a Comment