Thursday, December 8, 2011

ஐஸ்வர்யா ராய் பிரவசத்துக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்

பிரவசத்துக்குப் பின் தன உடலளவில் மீண்டும் பழைய நிலைக்கு வந்தபின்னர் திரைப்படத்தில் நடிக்கும் எண்ணம் தனக்கு உள்ளதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். 

பிரபல இந்திப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். சல்மான் கானுக்கு பதிலாக இப்படத்தில் ஷாருக் கான் ஹீரோவாக நடிக்கிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து அவர் நடிப்பாரா, இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த சந்தேகத்துக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த சூப்பர்ஹிட் படம் ‘ஹம் தில் தே சுகே சனம்’.

-

-


-


இதில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். இதே ஜோடியை வைத்து தனது கனவு படமான ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற படத்தை இயக்க இருப்பதாக பன்சாலி 2003-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வெறும் அறிவிப்போடு நின்றிருந்த அந்த பிராஜக்ட்டை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் பன்சாலி. ஏற்கனவே திட்டமிட்டபடி, ஹீரோயின் ஐஸ்தான். ஹீரோ.. சல்மான் கான் அல்ல. அவருக்கு பதிலாக ஷாருக் கான். ஐஸ்வர்யாவுக்கும் சல்மானுக்கும் ஆகாது என்பதால் இந்த அதிரடி மாற்றம். குழந்தை பெற்ற ஐஸ்வர்யா ராயை சமீபத்தில் சந்தித்து வாழ்த்து சொன்ன பன்சாலி, படம் சம்பந்தமாகவும் அவர் காதில் போட்டு வைத்தார். குழந்தையை கவனிப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் ஐஸ், இடையே கதை பற்றி பேச நேரம் ஒதுக்கினார். இயக்குனர் சொன்ன கதையை ரசித்து கேட்ட அவர், உடனே ஓகே சொல்லிவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment