Friday, December 16, 2011

Remote Location இல் இருந்து உங்கள் கணினியை இணைப்பது எப்படி?

Remote Desktop இணைப்பு வசதியின் மூலம் உங்கள் கணினியில் (host) உட்கார்ந்து கொண்டு அதே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்றொரு கணினியை (client) இணைத்துக்கொள்ளலாம். இதனால் அந்த கணினியை உங்களது முழுக் கட்டுபாட்டில் கொண்டு வரலாம்.

இந்த வசதியை செயல்படுத்த, உங்கள் ஹோஸ்ட் கணினியில் administrator ஆக உள்நுழைந்து சில கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

Click on “My Computer“–>Properties.

Remote tab கீழ் உள்ள “Allow users to connect remotely to this computer” யை தேர்ந்தெடுத்து.Ok பட்டன்னை கிளிக் செய்யவும்.


ஹோஸ்ட் கம்ப்யூட்டரின் IP address யை தெரிந்துகொள்ள,command promptக்கு போய் “ipconfig/all“ என்று டைப் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் client computerக்கு சென்று ,Windows+R பிரஸ் செய்து “mstsc“ என்று டைப் செய்யவும்.


“கணினி” பிரிவில், உங்கள் ஹோஸ்ட் IP முகவரியை அளிக்கவும். பின்பு “பயனர் பெயர்”வழங்கவும். அதன்பின் கடவுச்சொல்லை நிரப்பி உள்நுழையவும்.நம்பிக்கைச்சான்று சரியாக இருந்தால், உங்கள் ஹோஸ்ட் கணினியை வெற்றிகரமாக இணைக்க முடியும்.

No comments:

Post a Comment