Friday, December 16, 2011

வீழ்ச்சிக்குள்ளாகும் கூகுள்+. முன்னேறிவரும் பேஸ்புக்

கூகுளின் கனவுத்திட்டமென வர்ணிக்கப்பட்ட கூகுள் + சமூக வலையமைப்பு பாவனையாளர்களை சிறிதுசிறிதாக இழக்கத் தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ்வலையமைப்பு ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாவனையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது.

பின்னர் செப்டெம்பர் மாதம் அனைவருக்கும் அனுமதியளிக்கத் தொடங்கியது.

எனினும் பின்னர் அசுரவேகத்தில் வளர்ச்சியடைந்த கூகுள் + சடாரென வீழ்ச்சியடைந்தது.

ஆரம்ப காலத்தில் இதன் வளர்ச்சி பேஸ்புக்கின் ஆரம்பகாலத்தினை விட அதிகமாக இருந்தது.

எனினும் தற்போது அதன் பாவனையாளரின் எண்ணிக்கை எதிர்பார்க்காத அளவுக்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இன்னும் சிறிது நாட்களில் இது மேலும் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேஸ்புக்கிற்கு சவாலளிக்குமென எதிர்ப்பார்க்கும் பாவனையாளர்களுக்கு இத்தகவலானது சற்று கவலையளிக்குமென்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புக்கள் தங்களுக்கென கூகுள் + இல் ஒரு பக்கத்தினை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.

இவ்வசதியினை இலவசமாகவே வழங்குவதாகவும், இதற்கான பக்கத்தில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தப் போவதில்லையெனவும் கூகுள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment