Friday, December 16, 2011

பேஸ்புக்கில் டைம்லைன் என்றால் என்ன? தெரிந்துகொள்ள வேண்டுமா?

இவ்வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும், சர்ச்சையைக் கிளப்பியதும், இதுவரை பேஸ்புக்கினால் மேற்கொள்ளப்பட்டதுமான 'டைம்லைன்' வசதி நேற்று முதல் அதன் அனைத்து பாவனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

 
இதனை https://www.facebook.com/about/timeline என்ற முகவரியில் சென்று பெற்றுக்கொள்ள முடியும். கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ' Get Timeline ' பட்டனை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும்.

 


பாவனையாளர்கள் விரும்புகின்றார்களோ, இல்லையோ 'டைம்லைனு'க்கேற்ப உங்களது புரொஃபைல் மாற்றமடைந்தே தீரும்.

பேஸ்புக்கில் உங்களது அனைத்து நடவடிக்கைகளும் காலத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படும்.

தற்போது 'டைம்லைனை' பெற்றுக்கொள்ளும் போது உங்களுக்கு 7 நாட்கள் (Grace Period) அவகாசம் கிடைக்கின்றது. அதாவது டிசம்பர் 22 ஆம் திகதி வரை. இக்காலப்பகுதியில் உங்கள் புரொஃபைல் டைம்லைனிற்கேற்ப மாற்றமடைந்த போதிலும் மற்றைய பாவனையாளர்கள் இதனைப் பார்வையிட முடியாது.

காரணம் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Publish Now என்ற பட்டனை அழுத்தினால் மட்டுமே மற்றவர்கள் அதனைப் பார்வையிட முடியும். எனினும் இது 22 ஆம் திகதி வரை மட்டுமே.
 


எனவே பாவனையாளர்கள் தங்களது டைம்லைன் புரொஃபைலில் உங்களுக்குத் தேவையானவற்றை விட்டுவிட்டு மற்றவைகளை அழித்து விடவோ அல்லது டைம்லைனில் இருந்து மறைத்து வைக்கவோ முடியும். இதற்குப் பின்னரே ' Publish Now' வினைக் கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது இம்மாதம் 22 ஆம் திகதி வரை மட்டுமே. அதற்குப் பின்னர் உங்கள் டைம்லைன் புரொஃபைலினை அனைவரும் பார்வையிடக் கூடியதாக இருக்கும். எனவே இத்திகதிக்கு முன் அனைவரும் தங்களது அந்தரங்கத் தகவல்கள் வெளியே கசிய விடாமல் பாதுகாப்பதே இலகுவழியாகும்.

நன்றி வீரகேசரி 

No comments:

Post a Comment