Friday, December 16, 2011

தனுஷ் அஜித்தை சந்தி்த்த ரகசியம் வெளியானது.பரபரப்புத் தகவல்கள்

தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம் என உலகை தன் பக்கம் திசை திருப்பிய “ ஒய் திஸ் கொலவெறி?” பாடல் இடம்பெற்ற 3 படத்தின் இசைவெளியிட்டை இத்தனை சீக்கிரம் அறிவிப்பார்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 

சோனி மியூசிக் நிறுவனம் டிசம்பர் 23-ஆம் தேதி 3 படத்தின் இசையை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

இதை அந்தப் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்திருகிறார். ” மிகவும் பிஸியாக பணியாற்றி வருகிறோம். 

3 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாறுபட்ட விழாவாக நடத்தை திட்டமிட்டு வருகிறோம். 23-ஆம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும். ” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் அஜித் கலந்து கொள்வது உறுதி தனுஷ் வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. கொலவெறி பாடலை பாடியபடி தனுஷ், மேடையில் ஆடவும் இருகிறாராம். 3 படத்தில் கொலவெறி உட்பட மொத்தம் 5 பாடல்கள். அதில் ஒன்று தீம் இசையாம். உலக அளவில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட கொலவெறி பாடல்களின் ஆடியோ விஷுவலும் நிகழ்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது!

No comments:

Post a Comment