Friday, December 16, 2011

மௌனகுரு-சினிமா விமர்சனம்-விஜயோ, சூர்யாவோ நடித்திருந்தால் இந்தப்படம் எங்கயோ போயிருக்கும்

திருட்டு பயலே,ஆரண்ய காண்டம், யுத்தம் செய் படங்களுக்குப்பின் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திரைக்கதையோடு களம் இறங்கி இருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவி இயக்குநர் சாந்தகுமாருக்கு அழகிய பூச்செண்டுடன் வரவேற்று வாழ்த்தலாம்.. 

சாலை விபத்தில் ஒரு கார் சிக்குது..டிரைவர் உயிருக்கு போராடறான்.. அந்த கார் டிக்கில கோடிக்கணக்குல பணம்.அந்த வழியா வந்த போலீஸ் ஜீப்ல ஒரு இன்ஸ்பெக்டர், 3 போலீஸ், அந்த பணத்தை ஆட்டையை போட்டுடறாங்க.இதுக்கு மாஸ்டர் பிளானாக இருக்கும் இன்ஸ்பெக்டர் தன்னோட சின்ன வீட்டுல இருக்கறப்ப இந்த மேட்டர் சம்பந்தமா தன் கூட்டாளிகளோட ஃபோன்ல பேசறதை பாப்பா வீடியோ எடுத்துடுது.. 

அந்த வீடியோவை வெச்சு மிரட்டி பணம் முழுவதையும் தானே கறந்துடலாம்னு பாப்பா ஐடியா பண்றப்ப காலேஜ் ஸ்டூடண்ட் ஒருத்தன் அந்த வீடியோ கேசட்டை ஆட்டையை போட்டுடறான்.. இது ஒரு டிராக்.. ஹீரோ எப்படி எண்ட்டர் ஆகறார்? 
.
ஹீரோவோட கேரக்டரை நல்லா புரிய வெச்சுடறாங்க ஓப்பனிங்க் ஷாட்லயே.. ஆள் பார்க்க அமைதி டைப். ஆனா 2 ரூபா சில்லறையை ஏமாத்துனதுக்காக ஒன் ருப்பி காயின் பூத்தையே உடைக்கற ஆள்.அவர் தன் அண்ணன் வீட்டுக்கு வர்றார், காலேஜ்ல படிக்க , ஹாஸ்டல்ல தங்கறார். அண்ணிக்கு ஒரு தங்கை.. அதான் ஹீரோயின். 2 பேருக்கும் லவ் ஆகறதை அழகிய கவிதையா போற போக்குல சொல்லிடறாங்க..


படத்தின் ஆறுதல் அருள்நிதியின் நடிப்புதான். வம்சம் படத்தில் எடுத்த டிரைனிங் இன்னும் பலன் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் இவரது பேச்சும் முக பாவனையும் எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. மனநோயாளி காப்பகத்தில் இருந்து வரும் இவரை வீட்டில் உள்ளவர்கள் சந்தேகம்படும் இடத்தில் அவர்கள் மேல் நமக்கும் கூட ஆத்திரம் வருகிறது. அந்த அளவுக்கு கொஞ்சம் எமோஷனலான இடம் அது.




வாகை சூடவா இனியாதான் மௌனகுரு படத்தில் அருள்நிதிக்கு ஜோடி. மெல்ல ஹீரோ தோளில் சாய்ந்து கொள்கிறார், காபி போட்டுக் கொடுக்கிறார், செலவுக்கு பணம் கொடுக்கிறார், ஒரு பாட்டுக்கு ஆங்காங்கே நடந்து போகிறார் இதை மட்டும்தான் செய்கிறது இனியாவின் கேரக்டர். 

இனியாவுக்கு அக்காவாக நடித்திருக்கும் நடிகை எப்ப பார்த்தாலும் மதுரையை எரிக்கிற மாதிரியே பார்க்கிறாங்க. டிவி தொடரில் வில்லி கேரக்டருக்கு ரொம்பவே கரெக்டாக இருப்பாங்க.

பாதராக வருகிற அந்த கேரக்டர் தன் மகனே ஒரு திருடன் என்று தெரியும் போது வருத்தப்படுகிற காட்சிகள் நம்மை ரொம்பவே டச் பண்ணுகின்றன.

க்ரைம் இன்ஸ்பெக்டர் பழனியம்மாளாக வரும் உமாரியாஸ்கான் கர்பமான இன்ஸ்பெக்டராக இருந்தாலும் கடமை தவறாத இன்ஸ்பெக்டராக மின்னுகிறார்.

வில்லன் கேரக்டரில் ஜான் விஜய். மனுஷன் ரொம்பவே கலக்குறாருப்பா. ஒரு கட்டத்தில படத்தின் ஹீரோ ஜான் விஜய்தானோ என்கிற சந்தேகம் எல்லாம் நமக்கு வந்து விடுகிறது.

ஜான் விஜய் கூடவே வருகிற அந்த மூன்று காவல்துறையினர், க்ளைமேக்ஸ் காட்சியில் அருள்நிதியுடனே வரும் அந்த மனநோயளி கேரக்டர் எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். அதுவும் கடைசியில் அவர் சொல்லும், ‘தள்ளுவண்டியில பரோட்டா விக்கிறவன்கிட்ட எவ்வளவு வாங்குவாங்கன்னு கேளு… சொல்லுவான்…’ என்று சொல்லும் டயலாக்குக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. 

கதை எழுதி இயக்கியிருக்கிறார் சாந்தகுமார். முதல் பாதியில் படம் வீட்டுக்குள்ளும் காலேஜ் உள்ளேயுமே திரும்ப திரும்ப சுற்றிக் கொண்டிருக்கிறது. இடைவேளைக்கு பிறகாவது தேறும் என்று பார்த்தால் பெரும்பாலான காட்சிகள் வளவள காட்சிகளாகவே இருக்கின்றன. எல்லாம் இயக்குனரின் திரைக்கதை படுத்தும்பாடு. ஆக்க்ஷன் திரில்லர் படமாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் சொத சொத எஃபக்டில் ஆங்காங்கே திசை மாறி பயணிக்கிறது.

No comments:

Post a Comment