பெரும்பாலான ஹீரோக்கள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதெல்லாம், சாகுறதுக்குள்ளே ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சுடணும். அதுதான் என் ஆசை என்றெல்லாம் அளப்பார்கள். ஆனால் யாராவது அந்த குறிப்பிட்ட கேரக்டரோடு வந்தால், '...ந்தா. சுவிட்சர்லாந்துல டீ குடிச்சுட்டு வந்துடறேன்' என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
அப்படி எல்லாரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து, ஒரே நேரத்தில் அலறவும் வைக்கிற கேரக்டர் மாவீரன் பிரபாகரன் வேடம்தான். ஆனால் எவ்வித பதற்றமோ, பயமோ இல்லாமல் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறார் சத்யராஜ்.
நடிகர் நந்தா தற்போது விடுதலைப்புலி திலீபனின் வரலாற்றை படமாக்கிக் கொண்டிருக்கிறார். இடையில் நிறுத்தப்பட்டிருந்த இப்படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு விட்டது.
இதில்தான் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார் சத்யராஜ். திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது அவரை நேரில் சந்தித்தாரல்லவா பிரபாகரன்? அந்த ஒரு நிமிட காட்சியில்தான் நடிக்கப்போகிறார் சத்யராஜ்.
கருத்தை பதிவு செய்யுங்கள்
|
No comments:
Post a Comment